கட்டாயம் இதை படியுங்கள்…டெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு..

உங்களின் வீடுகள் மட்டும் இருப்பிடத்தை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். அங்கு தான் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. துளசி ஜூஸை நீங்கள் அப்படியாக நீர் தேங்கியிருக்கும் பகுதியில் தெளிக்கலாம். அப்படி தெளித்தால், லார்வாக்களாக வளரும் கொசுக்கள் கொல்லப்படும்.

துளசி, லாவண்டர், லெமன்கிராஸ், மேரிகோல்ட் மற்றும் புதினா போன்ற செடிகள் இயற்கையாகவே கொசுக்களை வீட்டில் அண்ட விடுவதில்லை. நீங்கள் அதனை அதிக அளவில் வளர்க்கலாம். வேப்பிலைகள் கொசுக்களை ஒழிக்கும் திறன் கொண்டவை. உங்கள் வீட்டின் அருகில் இடம் இருந்தால் நீங்கள் அங்கு வேப்பமரத்தினை வளர்க்கலாம்.

கற்பூரம், வேப்பெண்ணை, யூக்கலிப்டஸ் எண்ணெய், லெமன்கிராஸ் எண்ணெய், மற்றும் டீ ட்ரீ ஆயில், அல்லது லேவண்டர் ஆயில் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரோமா விளக்குகள் பயன்படுத்துவதாலும் கொசுக்கள் வளர்வது கட்டுப்படுத்தப்படும். மறக்காமல் கொசு வலை பயன்படுத்துங்கள்.

இந்த ஆயுர்வேத பொருட்களை உடலில் தேய்த்தாலும் கொசுத்தொல்லைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சரிசமமாக கலந்து உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.

சந்தன எண்ணெய்

மஞ்சள் பசை

வேப்பிலையை அரைத்து பூசலாம்

துளசி இலையை அரைத்து பூசலாம்

வேப்ப எண்ணெய் மற்றும் டீ ட்ரி எண்ணெய் ஆகியவற்றை சரிசமமாக கலந்து நீங்கள் உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.

கொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல், தோல் பிரச்சனைகளை சரி செய்ய

வேப்பிலைச்சாறுடன் தேன் கலந்து தடவலாம். துளசி சாறினை உடலில் தடவலாம்

சந்தனம் மற்றும் மஞ்சளை சமமாக கலந்து உடலில் பூசிவர கொசுக்கடியால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்

பசு நெய் தடவினாலும் இது குணமாகும். கற்றாழையையும் நீங்கள் பயன்படுத்தலாம். எப்சம் உப்பினை பயன்படுத்தி குளித்தால், கொசுக்கடியினால் ஏற்படும் தடிப்புகள், எரிச்சல் முற்றிலும் குணமாகும்.

Leave a Reply