முதுகெலும்பின் பலத்தை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்….

நமது உடலில் உள்ள முதன்மையான உறுப்பான முதுகெலும்பின் பலத்தை அதிகரிக்க, எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.
தாவர புரதங்கள்

புரதச்சத்துக்கள் முதுகெலும்புக்கு வலுசேர்ப்பவை. பருப்பு வகைகள், நட்ஸ்கள் ஆகியவற்றை நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் முக்கிய தாதுக்கள் முதுகெலும்பை நலமாக வைத்துக்கொள்ள உதவும்.
மீன் வகைகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், முதுகெலும்புக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும். இந்த சத்துக்கள் மீன்களில் அதிகளவு உள்ளன. குறிப்பாக சால்மன், கடல் பாசிகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு உள்ளன.

மூலிகை டீ

கிரீன் டீ, ஊலங் டீ ஆகியவற்றில் முதுகு வலி, தண்டுவட வலி ஆகியவற்றை சரிசெய்யும் ஆற்றல் உள்ளது. எனவே, இதுபோன்ற மூலிகை டீயை குடித்து வருவதன் மூலம் முதுகெலும்பு வலுபெறுவதுடன், எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இஞ்சி, மஞ்சள் மற்றும் இலவங்கம்

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களான மஞ்சள், இலவங்கம், இஞ்சி ஆகியவை முதுகெலும்பிற்கு ஆற்றலை கொடுப்பவை. இவை உடலில் சிதைவடைந்த திசுக்களையும் சரி செய்ய உதவும்.
எண்ணெய்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய் ஆகியவை முதுகெலும்புக்கு ஆற்றலை தரும். எனவே, இந்த எண்ணெயில் உணவை சமைத்து சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுபெறும்.
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி முதுகு தண்டை வலுவாக்கவும், வீக்கம் ஏற்படாதவாரும் பார்த்துக்கொள்ளும். இதன்மூலம் முதுகெலும்பு வலுபெறும். எனவே, முதுகு வலி உள்ளவர்களும் இதனை சாப்பிட்டு வர நல்ல பலனை பெறலாம்.

கேரட் மற்றும் குடை மிளகாய்

முதுகெலும்பு பாதிப்படைவதற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாதது தான் காரணம். எனவே, கேரட் மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை சாப்பிட்டு வருவதன் மூலம், முதுகெலும்பு பகுதியில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும்.
முளைக்கீரை

முதுகெலும்பில் ஏற்படக்கூடிய வீக்கத்தை முளைக்கீரை குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, இதனை சாப்பிட்டு வருவதன் மூலம் முதுகெலும்பு பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
பால் பொருட்கள்

கால்சியம் நிறைந்த உணவுகள் முதுக்கெலும்புக்கு வலுகொடுக்கும். எனவே பால், ஜூஸ் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் கால்சியம் சத்துக்களை பெறலாம். இதன்மூலம் முதுகெலும்பு பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

Leave a Reply