இப்டி பொங்க வச்சிட்டீங்களே பாய்ஸ் வெச்சு செய்த சாண்டி&கோ..

நடிகை கஸ்தூரிக்கு சரியாக சமைக்க தெரியவில்லை எனக் கூறி ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து மிகவும் கேலி செய்தனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு டாஸ்கில் சாண்டி உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நடிகை கஸ்தூரியை மிகவும் கேலி செய்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு சபாஷ் சரியான போட்டி என்றொரு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து போட்டியில் கலந்துகொண்டனர்.

கோப்பையில் போடப்பட்டிருந்த தலைப்புகளை எடுத்து இந்த பக்கம் ஒருவரும், அந்த பக்கம் ஒருவரும் என மாற்றி மாற்றி வாதாடினர்.

கடும் விவாதம்:

இந்த டாஸ்கின் போது, இரு அணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. சும்மாவே வாயாடும் வனிதா, இந்த டாஸ்க்கை பயன்படுத்தி தர்ஷனை கார்னர் செய்தது தனிக்கதை. இதனால் வாக்குவாதம் கடுமையாக முற்றியது. மதுவும், கவினும் நேற்றைய தங்களது சண்டையை இந்த டாஸ்க்கிலும் தொடர்ந்தனர்.

சமையல் வல்லவர்கள்:

சமையல் செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா என தலைப்பு கொடுக்கப்பட்டது. ஆண்கள் பக்கம் சாண்டியும், பெண்கள் பக்கம் கஸ்தூரியும் பேசினர். வீட்டில் முதன் முதலில் சிக்கன் செய்தது சரவணன் தான் என சாண்டி வாதிட்டார். மேலும் ஆண்களே சிறப்பாக சமையல் செய்வதாக அவர் கூறினார்.

மதுமிதா:

இதனை கஸ்தூரி மறுத்து பேசினார். பைவ் ஸ்டார் ஓட்டல் டாஸ்கில் சமையல் பொறுப்பாளராக மதுமிதா நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய கஸ்தூரி, பெண்கள் தான் சிறப்பாக சமையல் செய்வதாகக் வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட கவின், மதுமிதாவை செப்பாக நியமித்த பிக் பாஸ், கஸ்தூரியை ஏன் நியமிக்கவில்லை எனக் கேட்டார்.

கலகலப்பு:

சாண்டியும் சேர்ந்து கொண்டு, கஸ்தூரி சர்க்கரை பொங்கல் செய்ததை வைத்து கலாய்த்தார். இதையடுத்து, ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சேர்ந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த தலைப்பில் பெண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை என்றால் இனி கஸ்தூரி தான் சமைப்பார் என மதுமிதா கூறினார்.

விட்டுக் கொடுத்த ஆண்கள்:

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் அணி, அப்படி ஒரு தண்டனை தங்களுக்கு வேண்டவே வேண்டாம். பெண்களே ஜெயித்ததாக இருக்கக்கட்டும் என விட்டுக் கொடுத்துவிட்டனர். உள்ளுக்குள் கோபம் இருந்தாலும், வேறு வழியில்லாமல் கஸ்தூரியும் சேர்ந்து சிரிக்க வேண்டியதாயிற்று.
அதிக சம்பளம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கஸ்தூரிக்கு அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகாமல் தவிர்த்து வந்த கஸ்தூரி, இந்த சீசனில், அதுவும் ஒயில்ட் கார்டு மூலம் தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். பாவம் அதிக சம்பளம் கொடுக்கிறார்களே என ஆசைப்பட்டு, இப்படி அசிங்கப்படும்படியாக கஸ்தூரியின் நிலைமை ஆகிவிட்டதே என அவரது ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.

கஸ்தூரியின் குணம்:

காரணம் வெளியில் யார் எது கூறினாலும் உடனடியாக பதிலடி கொடுப்பதில் வல்லவர் கஸ்தூரி. சில சமயம் கெட்ட வார்த்தைகளைக் கூட அவர் பிரயோகித்துள்ளார். அப்படிப் பட்டவரை, குயிலைப் பிடிச்சு கூண்டிலடச்சு பாடச் சொல்லுகிற உலகம் என்ற ரேஞ்சுக்கு பிக் பாஸ் வாயைக் கட்டிப் போட்டு விட்டாரே.

Leave a Reply