பிக்பாஸ் சேரப்பாவை மறந்த மகள் லாஸ்லியா…

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, மற்ற சீசன்களைவிட இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இந்த முறை பங்கேற்றுள்ளது சிறப்பு மிக்கதாக கருதப்பட்டது.

ஆனால் தற்போது அவர்கள் அந்தச் சிறப்பினைத் தக்கவைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டிருந்தவர் லாஸ்லியா. அதற்குக் காரணம் இவருடைய எதார்த்தமான நடவடிக்கைகளும் கொஞ்சல் மிகுந்த பேச்சும் ஆகும்.

ஆனால் தற்போது அவை எல்லாம் காணாமல் போயே போச்சு.. சேரப்பா என்று ஆரம்பத்தில் இருந்தே மகள்போல் பாசம் கொண்டவராக இருந்தவர் லாஸ்லியா, தானாக முன் வந்து பலமுறை அவரிடம் நெருக்கம் காட்டியே பிக் பாஸ் வீட்டில் அவருடைய மகளாகவே ஆனார்.

கடந்த வாரத்தில் இருந்து அவரை கண்டுகொள்ளாமல் தர்ஷன், கவின், முகேன், சாண்டியுடன் மட்டுமே இருந்து வருகிறார். எப்போதும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவது வழக்கம், ஆனால் தற்போது அவருடன் சாப்பிடுவதையும் தவிர்த்தே வருகிறார்.

ஆனால் சேரன் இதனை நினைத்து பல முறை தனிப்பட்ட ரீதியில் வருத்தப்பட்டதுடன், மதுமிதாவிடம் வருத்தப்பட்டுக் கூறுவார், நேற்று இதுகுறித்து ஷெரினிடம் வருத்தப்பட்டுக் கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அதே சமயம், லாஸ்லியா அந்த கும்பலுடன் உட்கார்ந்து வீட்டில் இருப்போர்களை கேலி செய்து கொண்டிருந்தார்.

Leave a Reply