அழகு சாதனங்களுக்கும் எக்ஸ்பைரி இருக்கு

அழகு-சாதனங்களுக்கும்-எக்ஸ்பைரி-இருக்குஎன்பது மருந்துகளுக்கும், உணவுகளுக்கும் மட்டுமில்லை. அழகு சாதனங்களுக்கும் அது அவசியம். ‘‘தினசரி நீங்க உபயோகிக்கிற ஃபேர்னஸ் கிரீம், காம்பேக்ட் பவுடர், ஐ ஷேடோ, மஸ்காரா, லிப்ஸ்டிக்னு அழகு சாதனங்களுக்கும் ஆயுள் காலம் இருக்கு. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி, அதை உபயோகிச்சு, உங்க சரும அழகையும் ஆரோக்கியத்தையும் நீங்களே கெடுத்துக்காதீங்க…’’ 

‘‘எந்த அழகு சாதனம் வாங்கினாலும், முதல்ல நீங்க பார்க்க வேண்டியது, அதோட எக்ஸ்பைரி தேதி. எக்ஸ்பைரி முடிஞ்ச அழகு சாதனங்களை உபயோகிக்கிறதால, அலர்ஜி வரலாம். சருமத்துல சிவந்த தடிப்புகள் வரலாம். பரு, கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள், மங்கு வரலாம். ஒரு கட்டத்துல உங்க சருமத்தோட இயல்பான நிறமே மாறிப் போகலாம்.

அதுலயும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவங்களுக்கு இந்த பாதிப்புகள் ரொம்பத் தீவிரமா இருக்கும்’’ , காலாவதியாகிப் போன எந்தெந்த அழகு சாதனங்கள், எந்த மாதிரியான பாதிப்புகளைத் தரும் என்றும் விளக்குகிறார்.

‘‘காலாவதியான கிரீமும் காம்பேக்ட் பவுடரும் பெரிய பெரிய பருக்களையும் கட்டிகளையும் ஏற்படுத்தும். பழைய லிப்ஸ்டிக், உதடுகளை வீங்கச் செய்யும். அரிப்பை உண்டாக்கும். மஸ்காரா, கண்கள்ல இன்ஃபெக்ஷனை உண்டாக்கி, கண் இமை முடிகளை உதிரச் செய்யும். அதே ஐ ஷேடோவா இருந்தா, ‘ரெட் ஐ’னு ஒரு பிரச்னையை உண்டுபண்ணும்.

எக்ஸ்பைரி ஆன ஐ ஷேடோ, மஸ்காராவுல பாக்டீரியா தொற்றும். கண்களைச் சுற்றி உபயோகிக்கிற பொருள்கள் என்பதால, கருவிழியைக் கூட அது பாதிக்கலாம். சில வகை அழகு சாதனங்கள்ல ஆர்சனிக், லெட், ஸிங்க் ஆக்சைடு கலந்திருக்கலாம். அப்படிப்பட்ட பொருள்களை காலாவதியான பிறகும் உபயோகிக்கிறதால, இள வயசுலயே சுருக்கங்கள், கோடுகள் வரவும் வாய்ப்புகள் அதிகம்…’’

Leave a Reply