சூப்பர் டிப்ஸ்! இளமையாக இருக்க நெல்லிக்காய் ஜூஸ்..!

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நெல்லிக்காய் – ௭
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
தேன் – தேவையான அளவு

இஞ்சியை கழுவி தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு கூடவே இஞ்சி, 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளலாம்.

அரைத்த ஜூஸை வடிகட்டி கொள்ளவும்,. பின், அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.

தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.

Leave a Reply