சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 7
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
முருங்கை இலை – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, மிளகு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

முருங்கை கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.

இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு முருங்கை இலைகளை சேர்த்து வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்

கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

Leave a Reply