தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள்:

மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும். மேலும் ரத்தத்தோடு மலம் வெளிவரும். மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயிலில் வலி, நமைச்சல் போன்றவை உண்டாகும்.

காரணங்கள்:

* அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும் மூல நோய் வரலாம்.

நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழிக்க கஷ்டப்படுதல்.

எப்போதும் உட்கார்ந்திருப்பதும், உண்ட உணவு செரிக்காமல், வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம்.

* பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகரித்து மலத்தை வெளியில் போகாதபடி அடக்கி மலவாயில் அதிக வெப்பம் உண்டாகும். இதனாலும் நோய் உண்டாகும்.

* நீண்ட நாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்றவற்றாலும் மூல நோய் உண்டாகும்.

Leave a Reply