ஆரோக்கிய உணவு

சூப்பரான எள்ளுப்பொடி

தேவையான பொருள்கள்: எள் – 1/2 கப் , தோல் உளுந்து அல்லது வெள்ளை முழு உளுந்து – 1/2 கப், மிளகாய் வத்தல் – 15, பூண்டு பற்கள் – 10, புளி – சிறிய கோலி அளவு, பெருங்காயத்தூள் – 1/4, தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும். எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.

நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து திரித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி ரெடி.

Related posts

பழங்கள் தரும் பலன்கள்

nathan

50 கலோரிகள் கீழ் உள்ள உணவுகள்

nathan

பாசிப் பருப்பின் மகத்துவம்

nathan

Leave a Comment

%d bloggers like this: