தலைமுடி சிகிச்சை

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க. தேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா?

தேங்காய் எண்ணெய் என்பது அழகு சாதனப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்றாலே நமக்குச் சற்று எரிச்சல் ஏற்படும். ஏனெனில் இது சற்று நேரத்திலேயே முகத்தில் வடிந்து முகத்தின் அழகையே கெடுத்து நம்மைச் சோர்வாகக் காட்சியளிக்க வைக்கும்.

எனவே தேங்காய் எண்ணெயை தேய்க்க நமக்கு விருப்பம் இருக்காது. உங்களுக்காகத் தேங்காய்ப் பால் ஸ்பிரே உள்ளது. இதனை நீங்கள் தயார் செய்ய சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இது உங்கள் தலைமுடியை வலுவாக மற்றும் அடர்த்தியாக வளரச் செய்ய உதவுகிறது. இவற்றை எப்படி வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால் முடிக்கு எவ்வளவு நல்லது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதில் அதிக அளவு கொழுப்புகள், புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்கள் முதல் நுனி வரை சென்று முடியை வலுப்படுத்துகின்றன. மேலும் மெல்லிய முடி, பூச்சி வெட்டுகள், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியைச் சரி செய்கிறது. நீங்கள் வீட்டிலேயே தேங்காய்ப்பால் ஷாம்பூ அல்லது கண்டிஷனர் தயார் செய்தும் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை பிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
hugy

அத்தியாவசிய எண்ணெய்

ஆர்கான் எண்ணெய் முடிக்கு மாய்ஸ்சரைசராகவும், ஃபிரிஸைக் கட்டுப்படுத்தி மந்தமான கூந்தலுக்குப் பிரகாசத்தைச் சேர்க்க உதவுகிறது.

ஜோஜோபா எண்ணெய் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாகவும், நீரேற்றத்துடன் வைப்பதற்கு உதவுகிறது. ஏனெனில் இது உடல்களில் இயற்கையாக உற்பத்தியாகும் எண்ணெய்களைத் தூண்டுகிறது.

தேங்காய் எண்ணெய் முடி மற்றும் சருமத்தில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இதனை நீங்கள் ஹேர் ஸ்ப்ரேயில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ரோஸ்மேரி எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், மிளகுக்கீரை போன்றவை உங்கள் முடியை வலுப்படுத்த உதவும்.

DpbNgbBXgAEe oA
தேங்காய்ப் பால்

ஸ்பிரே பாட்டில் எடுத்து மேலே குறிப்பிடப்பட்ட எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக அத்தியாவசிய எண்ணெயினை சேர்க்க வேண்டும். தேங்காய் எடுத்து அரைத்து தேங்காய்ப்பால் தயாரித்து கொள்ளுங்கள். இப்போது தேங்காய்ப்பால் மிகவும் திக்காக இருக்கும். அதனை எடுத்து வடிகட்டி மென்மையானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.மீதமுள்ள தேங்காய் பாலுடன் சியா விதைகளைச் சேர்த்து பருகலாம். உங்களிடம் கூடுதல் எண்ணெய் இருந்தால் அதனை லிப்-பாம் அல்லது லோஷனாக பயன்படுத்தலாம். ஹேர் மாஸ்க் கண்டிஷனிங் ஆகவும் உபயோகிங்கள்.

பயன்படுத்தும் முறை

ஸ்ப்ரே பாட்டில் எடுத்து தேங்காய் பால் சேர்த்து அத்தியாவசிய எண்ணெய் மற்றும் தேங்காய்ப்பால் இரண்டும் ஒன்றோடு ஒன்றாகச் சேரும் வரை குலுக்குங்கள். இதனை பிரிட்ஜில் வைக்க விரும்பினால் பயன்படுத்தி விட்டு பிரிட்ஜில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அடுத்த முறை உபயோகிக்கும் போது நன்றாக ஷேக் செய்து விட்டுப்பயன்படுத்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button