இதை முயன்று பாருங்கள் வீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா?

பாடி வாஷ் என்பது தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என்று எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவருகிறது. இது உங்கள் உடலை விரைவில் சுத்தம் செய்ய உதவினாலும் இதன் விலை சற்று அதிகம் தான். கடைகளில் நீங்கள் வாங்கும் பாடி வாஷில் உள்ள ரசாயனங்கள் உங்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டுள்ளன.

அதற்காக நீங்கள் பாடி வாஷினை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

இதற்காக நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மிக எளிமையான முறையில் பாடி வாஷினை தயார் செய்யலாம். இந்த பாடி வாஷினை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாறி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துயிர் பெறச் செய்கிறது. இவற்றைப் பயன்படுத்திக் குளிக்கும் போது நீங்கள் ஒரு புது குளியல் அனுபவத்தை உணருவீர்கள். இவற்றை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேன், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய்

தேனில் உள்ள உமிழும் பண்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. நாட்டுச் சர்க்கரை இறந்த சரும செல்களை அகற்றி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைத் தரும். 3 முதல் 4 தேக்கரண்டியளவு தேன், 2 தேக்கரண்டியளவு நாட்டுச் சர்க்கரை, 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து முதலில் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் கலந்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு கலவையை கைகளில் எடுத்து 5 முதல் 10 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

கடல் உப்பு மற்றும் ஜோஜோபா எண்ணெய்

கடல் உப்பு உங்கள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. ஜோஜோபா எண்ணெய் சரும நோய்த்தொற்றுகளை அகற்றவும் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்கவும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 2 தேக்கரண்டியளவு கடல் உப்பு 4 முதல் 5 சொட்டு ஜோஜோபா எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் மசாஜ் செய்து விட்டுக் கழுவலாம். இந்த முறையை நீங்கள் மாதத்தில் இரண்டு முறை செய்யலாம்.

காபித்தூள், தேன் மற்றும் பாதாம் எண்ணெய்

காபித்தூள் மென்மையான சருமத்தைத் தருவதற்கும், பாதாம் எண்ணெய் சருமத்தை அதிக நீரேற்றத்துடன் வைப்பதற்கும் உதவுகிறது. 2 தேக்கரண்டியளவு காபித்தூள் 2 தேக்கரண்டியளவு தேன், 1 தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மெதுவாக ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு பின்னர் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தலாம்.

மிளகுக்கீரை மற்றும் தேயிலை மர எண்ணெய்

மிளகுக்கீரை சருமத்தை குளிரூட்டவும், தேயிலை மர எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைத் தருவதற்கும் உதவுகிறது. ஒரு சில மிளகுக்கீரை இலைகள், 3 முதல் 4 சொட்டு தேயிலை மர எண்ணெயை எடுத்து மிளகுக்கீரை இலைகளை பேஸ்ட் ஆக மாற்றி அதனுடன் தேயிலை மர எண்ணெயை சேர்த்துக் கலந்து உங்கள் சருமத்தில் ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

தேங்காய் நீர் மற்றும் ஆலிவ் ஆயில்

தேங்காய் நீரில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக மாற்றுகிறது. 3 தேக்கரண்டியளவு தேங்காய் நீர் 2 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் அப்ளை செய்து கழுவுங்கள். இதனை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

கற்றாழை, திரவ காஸ்டில் சோப் மற்றும் பாதாம் எண்ணெய்

கற்றாழை ஜெல் உங்கள் சருமத்தை நீரேற்றம் செய்து மிருதுவான சருமத்தை தர உதவுகிறது. காஸ்டில் சோப் என்பது உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் ஆழமாகச் சுத்தம் செய்ய உதவுகிறது. 2 தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டியளவு திரவ காஸ்டில் சோப், 3 முதல் 4 சொட்டு பாதாம் எண்ணெய் எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் அப்ளை செய்து கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன்

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் கலந்த கலவை உங்கள் சருமத்தை மென்மையாக வைப்பதுடன் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பிரகாசமாக மாற்றி இயற்கையான பளபளப்பைத் தருகிறது. 3 தேக்கரண்டியளவு ஆரஞ்சு சாறு, 2 தேக்கரண்டியளவு தேன் இரண்டையும் சேர்த்து உங்கள் சருமத்தில் அப்ளை செய்து கழுவுங்கள். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

ஓட்ஸ் மற்றும் தேன்

ஓட்ஸ் மற்றும் தேன் கலந்த கலவை உங்கள் சருமத்தை ஊட்டமளித்து, புத்துணர்ச்சியூட்டுகிறது. 3 தேக்கரண்டியளவு வேகவைத்த ஓட்ஸ், 2 தேக்கரண்டியளவு தேன் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சருமத்தில் மசாஜ் செய்து 5 முதல் 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை நீங்கள் வாரம் ஒரு முறை செய்யலாம்.

தேன், கோகோ பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

கோகோ பவுடரில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்கிறது. ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள துளைகளை மறைத்து இறுக்கமாக்க உதவுகின்றன. 3 தேக்கரண்டியளவு தேன், 3 தேக்கரண்டியளவு கோகோ பவுடர், 2 தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் மசாஜ் செய்து 5 முதல் 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை நீங்கள் வாரம் ஒரு முறை செய்யலாம்.

சர்க்கரை மற்றும் தேன்

சர்க்கரை மற்றும் தேன் கலந்த கலவை உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைத் தர உதவும். 2 அல்லது 3 தேக்கரண்டியளவு சர்க்கரை, 3 தேக்கரண்டியளவு தேன் எடுத்துக் கலந்து சருமத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து மென்மையான சோப்புக் கொண்டு கழுவுங்கள். இதனை நீங்கள் வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.

Leave a Reply