ஆரோக்கிய உணவு

சுவையான மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி ??

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் கழித்து அவற்றினை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பின் தக்காளி போட்டு பச்சை வாசனை போக வதக்கி அவற்றை மிக்ஸியில் போட்டு, அவற்றுடன் தேங்காய், மிளகு, சோம்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

128653593d52ea8e1ede66b0c52ed5fdf549b99dd 865975575

அதன் பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button