​பொதுவானவை

உபயோகமான தகவல்கள்/உங்களுக்கு உதவும் சட்டங்கள்!

 

?வங்கிக் கடன் மூலம் வாகனம்
வாங்கிய நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கேரன்டி
தந்தவருக்கு (Guarantor) சிக்கல் வருமா?

ஏ.ரூபன்ராஜ், ராஜபாளையம்,

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

‘‘வங்கியின் நிலை:
வாகனக் கடனைப் பொறுத்தவரை, கடன் வாங்கியவருக்குத்தான் கடனை திருப்பிச்
செலுத்த முழுப்பொறுப்பு இருக்கிறது. எதிர்பாராதவிதமாகக் கடன் திருப்பிச்
செலுத்தப்படவில்லை என்றால் வங்கி அல்லது கடன் வழங்கிய நிதி நிறுவனம்,
வாகனத்தைப் பறிமுதல் செய்து, விற்று கடன் தொகையை எடுத்துக் கொள்ளும்.
வாகனத்தை விற்றுக் கிடைத்த பணம் கடன் தொகைக்குக் குறைவாக இருந்தால், வங்கி /
நிதி நிறுவனம் கடன் வாங்கியவரிடம் பாக்கி தொகையை வசூலிக்கும்.  அப்படியும்
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடனுக்கு கேரன்டி அளித்தவரை அணுகி
கடனை வசூலிக்கலாம். கேரன்டி தந்தவர் நிலை: கடன் வாங்கியவர் கடனை
திருப்பிக் கட்ட இயலாமல் வாகனம் பறிமுதல் செய்யப்படும் நிலையில், அந்தக்
கடனுக்கு கேரன்டி தந்தவர், வங்கி மற்றும் கடனாளி யின் சம்மதத்தோடு
வாகனத்தின் பாக்கி கடன் தொகையையும் வங்கியிடம் செலுத்தி வாகனத்தை
வாங்கலாம். உறுதி அளித்தவர் வாகனத்தை வாங்க செய்த செலவை கடனாளியிடமிருந்து
திருப்பி வசூலிக்க உரிமை உண்டு.

p49a

கடனாளியின் நிலை:
கடனாளி வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாமல், கேரன்டி
அளித்தவர் வங்கிக்கு கடன் தொகையைக் கட்டி வாகனத்தை எடுத்துக்கொண்டால், கடன்
வாங்கியாவது கேரன்டி தந்தவரின் சம்மதத்தோடு, வங்கிக்குச் செலுத்திய தொகையை
அவருக்கு திருப்பிச் செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம்.’’

==========================================================================?என் வயது 61. எனக்கு ஒரு மகன்
(வயது 35),  ஒரு மகள் (29) இருக்கிறார்கள். என் அப்பா சுயமாக சம்பாதித்த
சொத்து எனக்கு உயில் மூலமாகக் கிடைத்தது. இப்போது இந்தச் சொத்தை நான்
யாருக்கெல்லாம் எழுதிவைக்க முடியும்?

அ.ராமநாதன், நாகப்பட்டினம்,

சுரேஷ் பாபு, வழக்குரைஞர்.

“இந்தச் சொத்து உங்களுக்கு உயில் மூலம் கிடைத்துள் ளதால், இதனை உங்களின்
சொந்த சொத்தாகவே கருதப்படும். எனவே, இந்தச் சொத்தை நீங்கள் யாருக்கு
வேண்டுமானாலும் எழுதிவைக்க உங்களுக்கு உரிமை உண்டு. சொத்து மற்றும் வாரிசு
பிரச்னைகளில் சில நுணுக்கமான சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்பதால்
வழக்குரைஞர் ஒருவரை கலந்தாலோசித்து, அவர் வழிகாட்டுதலுடன் செயல்படுவது
நல்லது.”


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button