28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
rhgrh
அழகு குறிப்புகள்

மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும்…

மருக்கள் நாளுக்குநாள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருக்கும். மருவை நீக்க அதை முடியால் இறுகக் கட்டுவது, வீட்டு சிகிச்சைகளை மேற்கொள்வது போன்றவற்றைப் பலரும் முயல்வதுண்டு.

மரு

“அவையெல்லாம் ஆபத்தானவை” என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா “மருக்களை நீக்குவதற்கென பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன” என்பவர், மரு எதனால் வருகிறது, அதை நீக்கும் சிகிச்சைகள் குறித்தெல்லாம் விரிவாகக் கூறுகிறார்…

மரு உண்டாகக் காரணங்கள்:

சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வைரஸ் கிருமியின் தாக்கம், வயது முதிர்வு, அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரில் உப்புச்சத்து அதிகமாக இருப்பது, சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, வியர்வையோடு இருப்பது, முறையான பராமரிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் மரு உருவாகும்.
rhgrh
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு வரும் பிரச்னையாக இருந்த மரு, சமீபகாலமாக 15- 20 வயதினரையும் பாதிக்கும் அடிப்படை பிரச்னையாக மாறிவிட்டது.
மரு

மரு வந்துவிட்டால், அதை நீக்க முடியுமா?

மருக்கள் பெரும்பாலும் கண்களைச் சுற்றியோ, கழுத்துப் பகுதியிலோ, அக்குள் மற்றும் வியர்வை அதிகம் வரும் பகுதியிலோதான் உருவாகும். மேலும், உடலில் மடிப்புகளுள்ள பகுதிகளில் மருக்கள் உருவாகும், பரவும் வாய்ப்புகள் அதிகம். முதல் நிலையிலேயே மருவைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஏனெனில், அளவு பெரிதாகும்போது, அந்த இடத்தில் வடு உருவாகிவிடலாம். மேலும் சிகிச்சையின்போது வலி ஏற்படலாம்.
gfjg
அழகுக்கலை நிபுணர்கள் அல்லது சரும மருத்துவர்கள் மூலம் `காட்டரைசேஷன்’ (Cauterization) என்ற சிகிச்சை மூலம் மரு நீக்கப்படும். இந்தச் சிகிச்சையில், முதல் நிலையில் வலிக்காமல் இருப்பதற்காக அனஸ்தீசியா க்ரீம் ஒன்று மருவின் மீது தடவப்படும். பின்னர், மருவின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அரைமணி முதல் முக்கால் மணி நேரம்வரை பொறுத்திருப்போம். அரை மணி கழித்து, ஸ்டிக்கரை நீக்கிவிட்டு கருவி ஒன்றின் உதவியுடன் நிமிடங்களில் மரு நீக்கப்பட்டுவிடும்.

அந்தக் கருவியில், `டிஸ்போசபிள் ஊசி’ ஒன்று பொறுத்தப்பட்டிருக்கும். அது, மருவை மெலிதாகப் பொசுக்கிவிடும். அப்படிப் பொசுங்கிய பகுதியை நிபுணர்கள் முறையாக நீக்கிவிடுவர். நீக்கிய பின் 24 மணி நேரத்துக்கு அந்தப் பகுதியில் நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தரப்படும் ஆன்டிபயாடிக் க்ரீமைப் பரிந்துரைக்கப்படும் காலத்துக்கு உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இப்படியாக மரு நீக்கப்படும் இடத்தில், மீண்டுமொரு முறை மரு வராது. அதாவது இந்த மருவின் தாக்கம், மீண்டுமொரு முறை உடலில் ஏற்படாது.
காட்டரைசேஷன்
trgr
மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும், அதற்கென பிரத்யேக பவுடர் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தேர்ந்த அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க என்ன செய்யலாம்?

சருமத்தைத் தூய்மையாகப் பராமரித்துக் கொள்பவர்களுக்கு மருக்கள் வராது. முறையாக ஃபேஷியல் செய்து கொள்பவர்களின் முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் இதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்துகொள்ளலாம். அந்த வகையில் மருவைத் தவிர்க்க சருமப் பராமரிப்பும், சுத்தமும்தான் சிறந்த வழி. தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். ஆன்டிசெப்டிக் பவுடர் வகைகள் உபயோகிக்கலாம். அதிக நேரம் வியர்வையுடன் இருப்பவர்கள், சருமப் பராமரிப்புக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சரும தூய்மை

குறிப்பு:

தகுந்த, தேர்ந்த அழகுக்கலை நிபுணரிடம் மட்டும் சிகிச்சை பெறவும்.

சுயமாக வீட்டு மருத்துவங்கள் மூலம் மருவை நீக்க முயல வேண்டாம்.

கண்களுக்கு அருகில் உருவாகும் மருக்களுக்கு, மருத்துவ ஆலோசனை பெற்று அவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.

Related posts

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

சூப்பர் டிப்ஸ்.. வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

nathan

மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி

sangika

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

முகப்பருவை சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வீட்டிலேயே சரிசெய்ய முடியும்.

nathan

கொழு கொழு கன்னங்கள் பெற

nathan

ஆவேசமாக பேசிய சின்மயி! கன்னித்தன்மையை இப்படி நிரூபித்தால் தான் நம்புவீங்களா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு தழும்பை நிரந்தரமாக போக்க இந்த ஒரு பொருள் போதும்.!

nathan