ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான் இந்த விஷயம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்யவே கூடாது.!

தற்போதைய காலத்தில் பெண்கள் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் அது ஹார்மோன்களை மோசமாக்கி,

சிறுநீரக பாதிப்பு போன்ற உடலில் பல சிக்கல்களை தோற்றுவிக்கும். எனவே, வயிற்று வலிக்கு மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்து, இயற்கை வழிகளை முயற்சித்து மாற்றங்களை காணலாம்.

உடற்பயிற்சி :

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அது தவறு. மாதவிடாய் காலத்திலும் மிதமான உடற்பயிற்சியை செய்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர உடல் வலிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ந்து செய்து வரும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்தில் தவிர்த்தால் மிகுந்த உடல் சோர்வு மற்றும் வயிற்று வலியும் அதிகமாகும் அபாயம் உள்ளது.

உணவைத் தவிர்த்தல் :

மாதவிடாய் காலத்தில் கட்டாயம் உணவை தவிர்க்க கூடாது. உணவை தவிர்த்தால், வயிற்றில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அதனால் வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும். பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.

பால் பொருட்கள் :

கால்சியம் அடிவயிற்று பிடிப்பை சரி செய்ய உதவக்கூடியது. மாதவிடாய் காலங்களில் உணவை தவிர்த்து பால் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைத்து பால் பொருளில் இருக்கும் கால்சியமும் பயன் தராது. மாறாக, பால் பொருட்களில் உள்ள அரச்சாடோனிக் அமிலம் வயிற்றுப் பிடிப்பை உண்டாக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் பால் பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.

அதிகமாக சாப்பிடுதல் :

மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. இந்நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சில பெண்கள் ஒரே இடத்தில் அமர்ந்து எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பது, உடல் சோர்வு போன்றவையே ஏற்படும்.

உப்புமிக்க உணவுகள் :

உப்புமிக்க உணவுகள் உண்பதை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை உண்டாக்கும். உடல் எடையையும் அதிகரிக்க செய்யும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை மற்ற நாட்களிலும் தவிர்த்து வந்தால், இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பாதுகாப்பில்லா உடலுறவு :

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பில்லை எனவும், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மை என்னவென்றால், மாதவிடாய் காலத்தில் சுத்தமில்லாமல் இருப்பதால் பாதுகாப்பில்லாத உடலுறவில் ஈடுபடக்கூடாது. எனவே முடிந்த வரை இக்காலத்தில் உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

வேக்சிங் மற்றும் த்ரெட்டிங் :

மாதவிடாய் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாகி உடல் பலகினமாக இருப்பதால், இக்காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் செய்தால் கடுமையான வலியை உணரக்கூடும். மாதவிடாய் காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் செய்யாமல் இருப்பது சிறந்தது.

Related posts

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

sangika

நாப்கினுக்கு குட்பை!

nathan

உங்க உடம்பு நல்லா இருக்கனும்னா இதெல்லா கண்ண மூடிட்டு தூர தூக்கி எரிஞ்சிடுங்க!!!தெரிஞ்சிக்கங்க…

nathan