ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு பிரச்னைக்கு எது முக்கிய காரணம்..?

கழுத்தின் முன்பகுதியில் காணப்படும் தைராய்டு சுரப்பி, ரத்தத்தில் உள்ள அயோடின் மற்றும் சில புரதப் பொருள்களையும் இணைத்துக்கொண்டு தைராக்ஸின் மற்றும் ட்ரை அயோடா தைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

அயோடினின் அளவு ரத்தத்தில் குறைந்தால், இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். ரத்தத்தில் அயோடினின் அளவு குறைவதே அயோடின் குறைபாடு என்று அழைக்கப்படுகிறது.

அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி சர்வதேச அயோடின் குறைபாட்டு விழிப்பணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் சத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று விளக்குகிறார் பொது மருத்துவர் வி.பத்மா.
rgtf
“உடலில் அயோடினின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்படும். அயோடின் அளவைச் சரியான வரம்பில் வைத்திருப்பதே உடலைப் பேணுவதற்கு சரியான வழியாகும். மூளைச் சிதைவு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஆகியவற்றைத் தடுக்கக்கூடிய காரணியாக அயோடின் உள்ளது. ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியமானதாகும். அயோடினுக்கும் தைராய்டு சுரப்பிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பொது மருத்துவர் வி.பத்மா

அயோடின் குறைபாடு அதிகமாகும்போது தைராய்டு சுரப்பி பெரிதாகுதல் (Goitre) மற்றும் ஹைப்போதைராய்டு ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி ஹார்மோன்களை குறைவாகச் சுரப்பது ஹைப்போதைராய்டு குறைபாடாகும். சுரப்பியில் அதிக அளவு ஹார்மோன் சுரப்பது ஹைப்பர்தைராய்டு ஆகும்.

ஹைப்போதைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அயோடின், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் `பி’ சத்து அடங்கிய ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசி ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய ஒமேகா 3 அதிகமுள்ள மீன்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டைகோஸ் காலிஃபிளவர், நூல்கோல், முளைகட்டிய பயறு வகைகள், பொரித்த உணவுகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
gdggm

ஹைப்பர்தைராய்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அயோடின் குறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், உப்பில்லா நட்ஸ், பருப்பு வகைகள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தேன், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அயோடின் உப்பை உணவில் பயன்படுத்த வேண்டும். இவர்கள் காலிஃபிளவர், புரொக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி அடங்கிய ஆளி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகள், மிளகு, பச்சைமிளகாய், மஞ்சள் போன்ற உணவுப்பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படாமல் அயோடின் அளவு மட்டும் குறைவாக உள்ளவர்களுக்குக் கழுத்தில் வீக்கம் ஏற்படும். அதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வீக்கத்தைக் குறைத்துவிட முடியும். அதேபோன்று அயோடினை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்ப்புண் முதல் தைராய்டு அழற்சி, தைராய்டு புற்றுநோய் வரை பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது.
dhgd

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடம்பில் 15 முதல் 20 மைக்ரோ கிராம் அயோடின் இயற்கையாகவே இருக்கும். அவற்றில் 70 முதல் 80 சதவிகிதம் தைராய்டு சுரப்பியில் காணப்படும். ஒரு மனிதனின் அன்றாடச் செயல்பாட்டுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை என்பதால் உடலுக்குத் தேவைப்படும் மீதம் அயோடினை உணவு மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் அயோடின் குறைபாடு, குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால் கர்ப்பிணிகள் அயோடின் அளவைச் சரியாக நிர்வகிப்பது அவசியம். அயோடின் குறைபாடு குழந்தைகளின் அறிவுத் திறனையும் குறைக்கும்.

ஒருவரின் உடலில் அயோடினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அயோடின் பேட்ச் பரிசோதனை (Iodine Patch Test), ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். பால், முட்டை, உப்பு நீரில் வளர்ந்த மீன், தானியங்கள் ஆகியவற்றில் அயோடின் நிறைந்து காணப்படும். அயோடின் சத்தை அதிகரிக்க இந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button