அறுசுவை இனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்..!எளிதாக எப்படி செய்வது

தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் செய்து கொண்டாடும் பண்டிகை என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது சுவையான அதிரசம் வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

ப‌ச்ச‌ரி‌சி – அரை ‌கிலோ
வெல்லம் – அரை ‌கிலோ
ஏலக்காய் (பொடித்தது) – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மெல்லிய வெண்ணிறத்துணியில் பச்சரிசியை பரப்பி நிழலில் காய வைக்கவும். ஈரம் காய்ந்த பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை தூளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகு பதமாக வரும் போது ஏலக்காய் போட்டு பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, பச்சரிசி மாவை சிறிது, சிறிதாக கொட்டி கிளறவும்.

இந்த கலவை சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெய் தடவியுள்ள வாழை இலை அல்லது பாலித்தீன் பேப்பரில் தட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுக்கவும். நன்றாக வெந்து, சிவந்த நிறமானதும் எண்ணெயை முழுமையாக வடித்து அதிரசத்தை எடுத்து, ஆறிய பின்பு பாத்திரத்தில் வைக்கவும். சுவையான அதிரசம் தயார்.!

Related posts

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

nathan

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி!…

sangika

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: