அறுசுவைசட்னி வகைகள்

சீனி சம்பல்

downloadவெங்காயம் – 3 பெரியது

பச்சை மிளகாய் – 3

மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி

பிரவுண் சீனி – 1தேக்கரண்டி

புளிக்கரைசல் – 1 கப்

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

•வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்.

•ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி மூடி அவிய விடவும்.

•வெங்காயம் நன்கு அவிந்து வதங்கி பிரவுண் நிறமானதும் அதனுள் மிளகாய் தூள், புளிக்கரைசலை சேர்த்து கிளறவும்.

•கலவை நன்கு வற்றி ஓரளவு சுருண்டதும் பிரவுண் சீனியை சேர்த்து கிளறி இறக்கவும்.

•இதனை அனைத்து வகையான உணவுகளுடனும் பக்க உணவாக உண்ணலாம்.

 

Note:

வெங்காயத்தை வதக்கும் போது இடையிடையே அடிப்பிடிக்காது கிளறி விடவும். புளிக்கரைசலிற்குப் பதிலாக வினிகரையும் சேர்க்கலாம். Sweet onion பாவித்தால் சீனி சேர்க்கத் தேவையில்லை. இதனை சூடு ஆறியதும் ஒரு சுத்தமான காய்ந்த பாட்டிலில் போட்டு தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும். அவ்வாறு எடுக்கும் போது சுத்தமான காய்ந்த கரண்டியை உபயோகிக்கவும்.

Related posts

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி?

nathan

வெங்காய சமோசா

nathan

அருமையான மிளகு காரச் சட்னி

nathan

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

nathan

பன்னீர் மசாலா

nathan

பான் கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

பருப்பு துவையல்

nathan

இஞ்சி சட்னி

nathan