ஆரோக்கியம் குறிப்புகள்

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

நீங்கள் காபி பிரியரா? உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாதா? இதோ உங்களுக்கான ஒரு நற்செய்தி.

ஜிம் செல்பவர்களுக்கு அல்லது அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகச்சிறப்பான பானம் தான் காபி என்பது தெரியுமா?

சமீபத்தில் விளையாட்டு ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி வளர்சிதை மாற்றத்தின் சர்வதேச இதழில் வெளிவந்த ஸ்பானிஷ் ஆய்வில், காபிக்கு பதிலாக மருந்துப்போலி எடுத்த பயிற்சியளிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும் போது, உடற்பயிற்சிக்கு முன் காபி குடித்த வீரர்களுக்கு சுமார் பதினைந்து சதவீதத்திற்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுவது தெரிய வந்தது.

என்ன இனிமேல் காபியை அச்சமின்றி குடியுங்கள். இக்கட்டுரையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எடை குறைக்க உதவும்

பொதுவாக காபியைக் குடிக்கும் போது, உடலில் உள்ள கொழுப்பு செல்கள் ஆற்றலாக செயல்பட ஆரம்பிக்கும். அதோடு காபியை அதிகமாக குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் வேகப்படுத்தப்பட்டு, பசியும் கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிகளவு உணவு உண்ண முடியாமல் போகும். ஆகவே, உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொண்டால், உடற்பயிற்சிக்கு முன் ஒரு கப் காபியைக் குடியுங்கள்.

செயல்திறன் அதிகரிக்கும்

விளையாட்டு மருத்துவ பத்திரிக்கையில் வெளிவந்த ரிப்போர்ட்டின் படி, காப்ஃபைன் விளையாட்டு வீரர்களின் சக்தியை நீண்ட நேரம் நீடித்திருக்க உதவுவதாக வெளிவந்துள்ளது. என்ன நம்பமுடியவில்லையா? 1500 மீட்டர் டிரெட்மில் ஓட்டத்தின் போது தன்னார்வலர்கள் 4.2 வினாடிகள் வேகமாக ஓடுவதை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கண்டுபிடித்தது. இப்போது நம்புகிறீர்களா?
pop
எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லையா?

ஜிம்மில் பளு தூக்கும் பயிற்சியினால் ஒவ்வொரு முறையும் கடுமையான தசை வலியினால் அதிக எண்ணிக்கையில் செய்ய முடியாமல் தோல்யடைகிறீர்களா? ஏன் உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு கப் காபியைக் குடிக்கக்கூடாது? அதுக்கூட தசை வலியைக் குறைக்கலாம் அல்லவா? இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் உடற்பயிற்சிக்கு முன் காபி குடிப்பதால், கார்டியோ உடற்பயிற்சிகளிலும் நீங்கள் வேகமாகவும், நீண்ட காலமாகவும் இயங்க முடியும் என்று உறுதியளிக்கிறது.

தசை இழப்பைத் தடுக்கும்

கோவென்ட்ரி பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானிகள் வயதானவுடன் ஏற்படும் தசை வலிமையை இழக்க காப்ஃபைன் உதவியதாக கண்டறிந்தனர். அதுவே மிதமாக எடுத்துக் கொண்டால், காபி ஒட்டுமொத்த உடற்திறனைப் பாதுகாக்கவும், வயது தொடர்பான காயங்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

ஜப்பானிய ஆராய்ச்சியில், இதுவரை காபி குடிக்காதவர்கள் காபியைக் குடித்ததில், அவர்களது உடலில் 30 சதவீத இரத்த ஓட்டம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைத்தால் காபியைக் குடியுங்கள்.

வலியைக் குறைக்கும்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் காபி குடிப்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், வலிமைக்கான உடற்பயிற்சிகளின் போது இது உங்களை சற்று கடினமாக்குகிறது. இதன் விளைவாக தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மை மேம்படும். இல்லினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியை செய்வதற்கு 1 1/2 மணிநேரத்திற்கு முன் காபி குடித்தால், உடற்பயிற்சியினால் ஏற்படும் தசை வலியைக் குறைப்பதாக உறுதிப்படுத்தியது.

நினைவாற்றலை அதிகரிக்கும்

உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, முன்பு மேற்கொண்ட குறிப்பிட்ட உடற்பயிற்சியை நினைவிற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் காபி குடித்தால், இது எளிதாக நடக்கும். 2014 ஆம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், காப்ஃபைன் உட்கொண்ட 24 மணி நேரம் வரை நினைவாற்றலை மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டது. அப்படியெனில் இனிமேல் தேர்வு நாட்களில் காபி குடிப்பதை கட்டாயமாக்க வேண்டும், என்ன சரி தானே?

அதிக ஆற்றல்

உடற்பயிற்சி செய்வதன் முன் காபி குடிப்பதால், உடற்பயிற்சியின் போது மட்டுமின்றி, உடற்பயிற்சிக்கு பின்னும் நன்கு ஆற்றலுடன் செயல்படக்கூடும். எனவே உங்கள் ஆற்றல் குறையாமல் இருக்க நினைத்தால், உடற்பயிற்சிக்கு முன் ஒரு கப் காபி குடியுங்கள்.

குறிப்பு

எதுவும் அளவுக்கு அதிகமானால், அது தீமையைத் தான் உண்டாக்கும். இது காபிக்கும் பொருந்தும். குறைந்தபட்ச பக்க விளைவுகளுடன் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமானால், பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச காப்ஃபைன் அளவு ஒருவரது உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 6 மி.கி வரை ஆகும். இது சராசரி எடை கொண்ட ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 400 மி.கி ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button