அறுசுவை இனிப்பு வகைகள்

செய்றது ரொம்ப ஈஸி! சுவையான வெண்ணிலா புட்டிங்

Vannila Pudding: முட்டையை நன்றாக அடித்து கலக்கி பின் அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு அதை கடாயில் ஊற்றவும். அதனுடன் மாப்பிள் சிரப் சேர்த்துக்கொள்ளவும். ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து நுரைகள் வந்து கலவை கெட்டியாகும் வரை சமைக்க வேண்டும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ்யை சேர்த்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதை ஒரு தனியான புட்டிங் கப்களில் ஊற்றி ஒவ்வொரு கப்புகளையும் க்ளிங் சீட்டால் மூடி பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஸ்பெர்ரியை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த ராஸ்பெர்ரியை ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்து கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்த்து இந்த சாஸை சூடாக அல்லது குளிர்வித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி பரிமாறலாம்.

Related posts

பாதாம் அல்வா செய்முறை

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: