ஹிப் ஹாப் ஆதி..சுந்தர்.சி அண்ணன் எனக்கு இண்டிபென்டென்ட் ஸ்பேஸ் கொடுத்தார்”

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவிச்சந்திரன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் முழு நீள ஆக்ஷன் திரைப்படம் “ஆக்ஷன்”.

விஷால் – தமன்னா நடிக்கும் இப்படம் நவம்பர் 15 ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு ஆக்ஷன் படத்தை பற்றி பேசினர்.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி , யோகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இந்த சந்திப்பில் ஹிப் ஹாப் ஆதி கலந்து கொண்டு மேடையில் பேசுகையில் ” படத்தில் மொத்தம் 5 பாட்டு. படத்துல முக்கியமான ரோல் பண்றது பாட்டை விட பின்னணி இசை தான் . இந்த படத்தை பொறுத்தவரைக்கும் படத்தின் பெயரில் மட்டும் மட்டும் ஆக்ஷன் இல்லை. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான். படம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஃபைட்டா தான் இருக்கும்” என்றார் .

மேலும் அவர் கூறுகையில் ” ரீ ரெகார்டிங் தான் இந்த படத்திலேயே கொஞ்சம் கஷ்டமான வேலையா இருந்துச்சு. இந்த படத்துல ஆக்ஷன் ப்ரோமோ பாடலில் என் கூட இரண்டு ஆர்ட்டிஸ்ட் பெர்பாமென்ஸ் பண்ணியிருக்காங்க.

ஆம்பள படத்துல என்ன எப்படி கொண்டுவந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இண்டிபென்டென்ட் ஆர்டிஸ்ட் ஸ்பேஸ் கொடுத்ததால் பெரிய பூஸ்ட்டா இருந்துது. அப்படி தெடர்ந்து குடுக்குற சுந்தர்.சி அண்ணாவுக்கும் விஷால் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி” என்று கூறினார் ஆதி.

மேலும் “ஆக்க்ஷன் படம் தியேட்டர்ல பாருங்க ஃபுல்லா ஃபைட்ட்டா இருக்கும் எனர்ஜியா இருக்கும். அது மட்டும் இல்லாமல் என்னோட அடுத்த படம் ஆனா “நான் சிரித்தால்” படத்துக்கு தயாரிப்பாளர் சுந்தர் சி அண்ணா தான். அந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட இருக்கோம் அதுக்கும் நன்றி அண்ணா ” என்று ஆதி தான் மியூசிக் இயக்குனராக பணிபுரிந்த ஆக்க்ஷன் படத்தை பற்றியும். அவர் நடித்து வெளிவரவுள்ள “நான் சிரித்தால்” படத்தை பற்றியும் மனம் திறந்து பேசினார்.

முழு நீள படம் என்பதால் ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். விஷாலுக்கு இணையாக ஆக்ஷன் சிக்வேன்ஸ் காட்சிகளில் கலக்கியுள்ளார் தமன்னா . வித்யாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களாக பார்த்து யாரும் நிலையில் இது போன்ற ஆக்ஷன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும்.

Leave a Reply