எப்போது திருந்துவார்கள் மக்கள்? மல்லையா பாணியில் கோவையில் ரமேஷ் 2200 கோடி மோசடி !

விஜய் மல்லையா பாணியில் கோவையை சேர்ந்த ரமேஷ் சீட்டு கம்பெனி நடத்தி சாதாரண மக்களின் 2200 கோடி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார்.

கோவையில் 80 ஆயிரம் பேரிடம், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி தனியார் சிட்பண்ட் நிறுவன அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர்.
புகார் அளிக்கப்பட்ட நிறுவனம்

தமிழகத்தில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு 36 கிளைகள் உள்ள நிலையில், டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளித்ததை தொடர்ந்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 350 பேர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அந்நிறுவன அலுவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

விஜய் மல்லையா அரசு பணத்தை திருப்பி தராமல் வெளிநாடு சென்று பிதுங்கியது போல், இந்த ரமேஷ் என்பவரும் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது, அரசு எத்தனையோ முறை தனியார் கம்பெனிகளை நம்பி முதலீடு செய்யவேண்டாம் என்று அறிவுறுத்திய பிறகும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டு கம்பனியில் பணத்தை போட்டுவிட்டு ஏமாந்துநிற்கும் மக்கள் என்று திருந்த போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனியாவது அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பது நல்லது !(புகார் அளிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் – யூனிவெர்சல் இன்சூரன்ஸ்)

Leave a Reply