இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

கொத்தமல்லி உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகள் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.

கொத்தமல்லி சாறு ஒரு டையூரிடிக் ஆகச் செயல்படுகிறது, அதாவது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது. பார்கின்சன், அல்சைமர் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உள்ளிட்ட பல மூளை வியாதிகள் வீக்கத்துடன் தொடர்புடையவை. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொத்தமல்லி இந்த நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். கொத்தமல்லி சாறு ஞாபகசக்தியை மேம்படுத்துகிறது. மேலும் பதற்றத்தைக் குறைக்கிறது. கொத்தமல்லிச் சாறு செரிமான தொடர்பான பிரச்னைகள், வயிறு வீக்கம், மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.

Leave a Reply