நடிகை அசினின் செல்லமகள் இவரே! அம்மாவை உரித்து வைத்திருக்கும் ஆரின்..

0 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசினை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள்.

ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மலையாள வரவான அசின் அடுத்தடுத்த அஜித், விஜய், படங்களில் கமிட் ஆனார். தொடர்ந்து 2 வருடங்கள் கனவு கன்னியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . கமல்ஹாசனுடன் இணைந்து அசின் நடித்த தசாவதாரம் சினிமா ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரெட்.

தமிழில் நடித்துக் கொண்டே பாலிவுட் பக்கம் அவரின் கவனம் திரும்பியது. கஜினி படத்தில் அசினுக்கு கிடைத்த வரவேற்பு தான் அவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்தது. கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு முழுக்கு இருக்கிறார் அசின்.

திருமணமான ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த ஒருவருடம் வரை அசின் தனது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்தார். அதன் பிறகு ஆரின் முதல் பிறந்த நாள் அன்று தான் புகைப்படம் வெளியாகியது.

இந்நிலையில், கடந்த வாரம் தீபாவளிக்கு முன்பு ஆரினின் இரண்டாவது பிறந்த நாள் மிக பிரம்மாண்டமாக மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்களை அசின் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Leave a Reply