ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!

பலருக்கு காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று கூட கூறலாம். ஒரு நாளைக்கு கணக்கில்லமால் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர்.

அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும். அதிக அளவில் காபி குடிப்பதோ அல்லது ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கும் காபியை குடிப்பதோ உங்கள் உடலில் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
காலை நேரத்தில் காபி மட்டும் குடிக்காதீர்கள்

இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள்.

ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிரு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.
காபி குடிப்பதற்கு முன் சாப்பிடவும்

தினமும் அந்த நாளை காபியுடன் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் இவ்வாறு செய்வது உங்களின் ஆற்றலை குறைக்கும்.

உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது.2019080ing first coffee SECVPF

இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும். இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.
அதிகம் குடிப்பதை தவிர்க்கவும்

மிதமான அளவில் காபி குடிப்பது ஆரோக்யமானதுதான். அதிகளவு காபி குடிப்பது அதனால் ஏற்படும் நன்மைகளை தடுக்கும்.

சராசரியாக ஒரு கப் காபியில் 96மிகி காஃபைன் உள்ளது, ஒருநாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது உங்களுக்கு எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

ஆனால் ஒருநாளைக்கு 400 மிகி அளவிற்கு அதிகமாக காஃபைன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button