30.3 C
Chennai
Tuesday, Dec 3, 2024
pregnent1
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்..!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் அதிகப்படியான புரோ- ஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு போன்றவை சோர்வை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமல்லாமல் முதுகு வலி, போதிய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது மிக அவசியம். எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியமான ஒன்று.

கடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால், இதனை அளவாக சாப்பிட வேண்டும்.

தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் அதில் ஆரோக்கியமான ப்ரோ-பயோடிக் பாக்டீரியாவும் நிறைந்திருப்பதால், உடல் சோர்வை தடுக்க முடியும்.

கீரைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்திருக்கின்றன. அதேசமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.

வாழைப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அது உடலில் உள்ளஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பிரசவத்தின் போது உண்டாகும் வலி குறைய வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும்போது உடல் வலிமையின்றி இருக்கும். எனவே நன்கு வலிமையோடும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் சோர்வு நீங்குவதோடு, எலும்புகள் நன்கு வலிமைபெறும். இத்தகைய கால்சியம் வெந்தயக் கீரையில் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. ஜூஸ் செய்து குடிப்பதால் உடலில் உண்டாகும் சோர்வைப் போக்க முடியும்.

பார்லியில் இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதுவும் உடற்சோர்வை போக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் கேரட்டை ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தின் போது கால்சியம் அளவை சீராக வைத்துக் கொள்வது அவசியம். பால், தயிர், பனீர் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

Related posts

காலை உணவைத் தவிர்த்தால் எடை குறையுமா?

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காதல் தோல்வியில் இருந்து விடுபடுவது எப்படி?

nathan

அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் பத்து பழக்கவழக்கங்கள்!!!

nathan

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!

nathan

உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்?

nathan