வலிமை தரும் பயிற்சி

80d7d911-3a74-457c-b90b-dc1fa07f9672_S_secvpfதோள்பட்டை வலுவடைய உள்ள பயிற்சிகளில் மிக முக்கியமானது ஷோல்டர் ப்ரெஸ் பயிற்சி. இந்த பயிற்சி செய்ய முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை பிடித்துக் கொள்ளவும். டம்பிள்ஸ் இல்லாதவர்கள் ஒரு லிட்டர் பாட்டிலை எடுத்துக் கொள்ளலாம்.

தோள்பட்டைகள் நேராக இருக்கும் நிலையில் அமர்ந்த படி  மூச்சை உள் இழுத்தபடி கையை  தோள்பட்டை அளவு உயர்த்த வேண்டும். மூச்சை வெளியே விட்டபடி அப்படியே கையை தலைக்கு கீழே இறக்கவும். பின் தோள்பட்டைக்கு கையை உயர்த்தவும்.

பின் தோள்பட்டைக்கு கையை இறக்கியபின் மீண்டும் உயர்த்த வேண்டும்.. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால் போதுமானது. தினமும் செய்ய வேண்டும் என்பதில்லை. மேலும் இந்த பயிற்சியை பெண்களும் செய்யலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். எலும்பு அடர்த்தி அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயம் குறைகிறது. இதய நோய் அபாயங்கள் குறைந்து, உடல் கொழுப்பு சதவீதத்தை குறைக்கிறது.

Leave a Reply