அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் அழகு குறிப்புகள்….!

சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.

சாதரண சருமம், எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக கவனம் செலுத்தவேண்டும்.

வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.

இவர்கள் ஆரஞ்சுப் பழ தோலை காயவைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் ஏடு சேர்த்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும்.

வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சம அளவு எடுத்து வெயிலில் கயவைத்து பொடித்து இதனை ஒரு ஸ்பூன் பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க, முட்டையின் மஞ்சள் கருவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் நாளாடைவில் சுருக்கம் மறைந்து போகும்.

எண்ணெய் சருமத்திற்கு வேப்பிலை கொழுந்து, முல்தானி மெட்டி பவுடருடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை குறையும்.

முல்தானி மெட்டி பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிருதுவாகும்.

வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த சமயத்தில் ரோஜா இதழ்களை பாலில் சிறிது நேரம் ஊறவைத்து அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால், புதுப்பொலிவு ஏற்படும்.

Related posts

உடலில் ஏற்படும் காயங்கள், பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் விரிவு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்

nathan

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: