ஆரோக்கியம் குறிப்புகள்

இவளோ பயன் இருக்கா! இதை படிங்க இனி இளநீர் தா குடிப்பிங்க பாருங்க,

கோடைகாலம் துவங்கினால் தான் இளநீர் குடிக்க வேண்டும் இல்லை,

ஏனென்றால் பலரது உடல் உஷ்ணம் அதிகம் உள்ளதாக இருக்கும். இந்த இளநீரால் நமது உடலுக்கு எண்ணெற்ற நன்மைகள் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராயிருந்தாலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம்.

பயன்கள்:

இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுபோக்கை சரிசெய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. கோடைக்கு ஏற்ற சத்தான பானம். வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
rtytry
உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன. இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது. காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம். சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது. சிறந்த சிறுநீர் பெருக்கி. சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது. சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button