32.8 C
Chennai
Sunday, May 19, 2024
hkjhj
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பல நோய்களை குணப்படுத்தும் முருங்கை விதைகள்..!

பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள்.

அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறுகின்றது. மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை பெற்றுள்ளது. அதோடு சர்க்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.
hkjhj

செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

முருங்கை விதை பலன்கள்:

கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.
முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும்.

ரத்த சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

Related posts

அவசியம் படிக்க..காலை நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan

கர்ப்ப காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகள்

nathan

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபி

nathan

உடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்

nathan

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்

nathan

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

nathan

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!

nathan

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? அப்ப இதை சாப்பிடுங்க

nathan