உடல் பயிற்சி

சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தரும் பேலன்ஸ் ரீச் பயிற்சி

 

சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தரும் பேலன்ஸ் ரீச் பயிற்சி வேலை பளுவால் ஏற்படும் மந்த நிலையை போக்க பயிற்சிகள் உள்ளன. அதிலும் இந்த பயிற்சி நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, வலது காலை பின் நோக்கி உயர்த்தி, தலைப் பகுதி தோள்பட்டைக்கு நேராக வரும்படி மடங்கிக்கொள்ளவும்.

அந்த நிலையில் இருந்தபடியே, வலது கையை நேராக நீட்டிக்கொள்ளவும். காலை மடக்க கூடாது. பிறகு, கையை இடுப்புப் பகுதிக்கு நேராகக் கொண்டுவரவும். அடுத்து, மூட்டுக்குப் பக்கமாகவும், பிறகு தரையில் படும்படியும் என நான்கு நிலைகளில் கொண்டு வரவும். இந்த நிலையில் உங்களால் முடிந்த நேரம் நிற்கவும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்பவும்.

இதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 5 முதல் 7 முறை செய்யலாம். ஆரம்பத்தில் ஒற்றை காலில் நின்று பேலன்ஸ் செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் பழகிய பின்னர் நன்றாக செய்ய வரும்.

பலன்கள்: உடல் உறுப்புகள் சமச்சீராக இயங்க உதவும். உடலை நன்கு வளைப்பதால், சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும்.

Related posts

இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்

nathan

முன் தொடையை வலிமையாக்கும் பயிற்சி

nathan

வீட்டிலேயே நடைப்பயிற்சி

nathan

முன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சி

nathan

ஜம்பிங் ஜாக் பயிற்சி

nathan

முதுகு வலியை போக்கும் பயிற்சி

nathan

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

nathan

தொப்பையை குறைக்கும் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

nathan

முகத்தின் பளிச் தோற்றத்திற்கு விரல் யோகா

nathan