முருங்கைகாயில் உள்ள அனைத்து சத்துக்களும் முருங்கை விதையிலும் உள்ளன. முருங்கைக்காயை பிடிக்காதவர்கள் கூட முருங்கை விதையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு உட்கொள்ளலாம்.
# முருங்கை விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
# முற்றிய முருங்கை விதைகளை காய வைத்து நெய்யில் வதக்கி பொடியாக்கி பால் கலந்து சாப்பிடநரம்புகள் பலப்படும். உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும்.
# கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.
# பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
# நீரிழிவு காலத்தில் உதவுகிறது. எடை குறைப்பில் உதவுகிறது.
# நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
# விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.