எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு

woman-oily-hairஎண்ணெய் தன்மை கொண்ட கூந்தல் என்றால் பிரச்சனை அதிகம். உஷ்ணம் அதிகரிக்கும் போதும், டென்ஷன் கூடும் போதும் எண்ணெய் அதிகம் சுரக்கும். இந்த வகையான கூந்தலைக் கொண்டவர்களின் மயிர்கால் எப்பொழுதும் எண்ணெய்யில் ஊறியது போல் காட்சியளிக்கும். கூந்தலை அடிக்கடி கழுவாவிட்டால் சொறி ஏற்படும்.

பங்கல் இன்பெக்ஷன் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தினமும் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு கழுவவேண்டியதிருக்கும். கழுவும்போது ஹேர் ஸ்கிரபர் பயன்படுத்தி தலை சருமத்தை தேய்த்து கழுவ வேண்டும். வறண்டு போய் காணப்படும் முடியின் கீழ்ப்பகுதியில் மட்டும் கண்டிஷனர் போடலாம்.

முடி உலர்ந்த பின்பு சீவுவதற்கு முன்பு ரொம்ப வறண்டு போய் காணப்பட்டால் சிரம் போட்டுகொள்ளலாம். தலை சருமத்தில் இன்பெக்ஷன் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு பீர் எடுத்து அதில் பஞ்சை முக்கி மண்டை ஓட்டுப்பகுதியில் தேய்த்து கழுவுவது நல்லது.

Leave a Reply