ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்ணியம் பேசும் இந்த காலக்கட்டத்திலும்..விதவைப்பெண்களுக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட கொடுமைகள்

இந்தியாவில் பெண்களின் நிலை என்பது இன்றும் மோசமாகத்தான் இருக்கிறது.

பெண்ணியம் பேசும் இந்த காலக்கட்டத்திலும் பெண்கள் வீட்டுச்சிறையில் மாட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களை மேலோட்டமாக பார்த்துவிட்டு பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று கூறுவது மடமைத்தனம். வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரை அனைவரும் நாள்தோறும் இந்த சமூகத்தால் ஏதாவது ஒருவிதத்தில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தியாவில் குறிப்பாக கணவரை இழந்த பெண்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 80 லட்சம் பெண்கள் விதவைகளாக உள்ளார்கள். நாம் நினைப்பதைக் காட்டிலும் விதவை பெண்களின் வாழ்க்கை கொடுமையானதாக இருக்கிறது. இந்தியாவில் பாரம்பரியம் என்ற பெயரில் விதவை பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட மற்றும் இப்போதும் தொடர்கிற கொடுமைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ராண்டி

கணவர் எந்த காரணத்துக்காக இறந்திருந்தாலும் அதன் பழியை சுமக்க வேண்டிய பொறுப்பு மனைவிகளையே சேர்கிறது. வட இந்திய மாநிலமான பஞ்சாபில் விதவைகளை ராண்டி என்று அழைக்கிறார்கள், இதற்கு அர்த்தம் விபச்சாரி என்பதாகும். இந்த பிராந்தியத்தில், அவர்கள் வழக்கமாக விதவை தனது இறந்த கணவரின் சகோதரனை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார்கள், ஏனெனில் ஒரு மனிதனுக்கு சொந்தமாக இருப்பது பாலியல் பலாத்காரத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியென்று இவர்கள் கருதுகிறார்கள்.
tyetry

கணவரின் மரணம்

விதவைகள் தங்கள் கணவரின் மரணத்திற்கு காரணம் என்று இன்றும் குற்றம் சாட்டப்படுகின்றனர், மேலும் அவர்கள் பல கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆன்மீக வாழ்க்கையைப் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது அவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கிறது.

கட்டாய மரணம்

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்கள் கணவரின் மரணத்திற்க்குப் பிறகு உயிர்துறக்க கட்டயப்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கம் இந்த கடந்த நூற்றாண்டில் பரவலாக இருந்தது, இருப்பினும் தற்போதும் அவர்கள் வாழ்க்கையின் இறுதிவரை துன்பத்திற்கு ஆளாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதகுலத்தின் இந்து வம்சாவளியான மனுவின் 2,000 ஆண்டுகள் பழமையான புனித நூல்களின்படி ” ஒரு நல்லொழுக்கமுள்ள மனைவி, கணவனின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து கற்புடன் இருந்தால் மகன் இல்லாவிட்டாலும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் ” என்று கூறுகிறது.

சதி

இந்தியாவில் இருந்த பல மூடநம்பிக்கைகளில் மிகவும் மோசமான நம்பிக்கை என்றால் அது இதுதான். கணவர் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏறி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். இதில் அந்த பெண்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பட்டார்கள்.

காரணம்

சதிக்கு பின்னால் இருந்தால் காரணம் பழங்கால மன்னர்களின் மனைவிகள் தங்கள் கணவர் போரில் இறந்து விட்டால் எதிரி நாட்டு மன்னரிடம் சிக்கினால் அவர்களின் அந்தப்புரத்தில் அடிமையாக இருக்க வேண்டும் என்று அச்சத்தில் மன்னர் இறந்த செய்து வந்தவுடன் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள். பின்னாளில் இந்த பழக்கத்தை சாதாரண மக்களும் பின்பற்றத் தொடங்கினர். பல போராட்டங்களுக்கு பிறகே இந்த பழக்கம் ஒழிக்கப்பட்டது.

விதவைப் பெண்களின் உருவம்

பாரம்பரியத்தை கடைபிடிக்கும் பெண்கள் விதவைப் பெண்கள் இளம் பெண்ணாக இருந்தாலும் சரி, வயதான பெண்ணாக இருந்தாலும் சரி வண்ணமயமான உடைகளை தவிர்க்க வேண்டும், நகைகளை துறக்க வேண்டும், தலையை மொட்டையடித்து விடவேண்டும் என்று கூறப்படுகிறது. இது மற்ற ஆண்களின் பாலியல் பார்வை விதவைகள் மேல் விழக்கூடாது என்பதற்காக இந்த மரபு கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விதிகளை பின்பற்ற வேண்டும்

விதவைகள் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும், மற்ற விதவைகள் பின்பற்றுவதை இவர்களும் எந்த கேள்வியும் கேட்காமல் கடைபிடிக்க வேண்டும். அதுதான் அவர்களின் விதி என்று நினைத்து அனைத்தையும் செய்ய வேண்டும், அவர்களின் உணவு முதற்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

உணவு கட்டுப்பாடுகள்

விதவைகள் பூண்டு, வெங்காயம், ஊறுகாய், மீன் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏனெனில் இவை இரத்தத்தின் தூண்டுவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும். இதனால் விதவைப் பெண்கள் அதனை சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டது, ஆனால் இவை நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பொருட்களாகும். இதனால் விதவைப் பெண்கள் சக்தி குறைந்து காணப்படுகிறார்கள். திருமணமான பெண்களை விட விதவைகளின் இறப்பு விகிதம் 85 சதவீதம் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

துரதிர்ஷ்டம்

இந்தியாவில் விதவைகளை துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். எந்தவொரு சுபகாரியத்திற்கும் அவர்கள் அளிக்கப்படுவதில்லை, அப்படியே அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கான மரியாதை என்பது கிடைக்காது. தாங்கள் செய்யாத தவறுக்காக வாழ்நாள் முழுவதும் நிராகரிப்பையும், அவமானங்களையும் அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

விதவைகளின் நகரம்

டெல்லியில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிருந்தாவனம் நகரம் ” விதவைகளின் நகரம் ” என்று அழைக்கப்படுகிறது. இங்கு 15,000 விதவை பெண்கள் கிருஷ்ணரை வணங்கிக் கொண்டும், மோட்சத்தை எதிர்பார்த்தும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மறுமணம்

விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத் தொடும் இந்த காலகட்டத்திலும் விதவைகள் மறுமணம் என்பது மறுக்கப்படும் ஒன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக வடஇந்தியாவின் பலப்பகுதிகளில் விதவைகள் மறுமணம் என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் அந்த பெண்ணின் துரதிர்ஷ்டம் மறுமணம் செய்துகொள்ளும் ஆணையும் பாதிக்கும் என்ற மூடநம்பிக்கை இன்றும் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button