ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி…!!

இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக்கரண்டியளவு பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு மற்றும் பூச்சி கடி போன்றவற்றிற்கு, கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

ஆஸ்டியோ பொராஸிஸ்: இது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஓமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

2046779191fa3f43a44a330e5ed894074e854a2f2 748169218

உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. இதில் தற்போது உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய் மற்றும் பிராஸ்ரேட் புற்றுநோயும் இருக்கிறது.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு அந்த இலைகளில் இருக்கும் ரசாயண பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.

நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து. அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button