மருத்துவ குறிப்பு

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு
பெற்றோர், குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு ஆளாகின்றனர். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற விளையாட்டுக்களை, வீட்டில் அமர்ந்து விளையாடச் சொல்லலாம். வேர்க்குருவை தவிர்க்க, ஒரு நாளில் இருமுறை குளிப்பதும், விளையாடியபின், கை கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும், உடல் தூய்மையை அதிகரித்து, நோய் தாக்கத்தை குறைக்கிறது.வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ, தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச் செய்வதும் அவசியம். வெயில் காலங்களில், குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், விளையாடும் குஷியில், சிறுநீர் கழிக்கக் கூட மறந்து விடுவர்.

அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, பின், அதை எடுத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும், வயிற்றுக்கும் நல்லது.

இதனால், வயிற்றுப்போக்கு பிரச்னைகளை தடுக்கலாம். அதுவும், வெயில் காலத்தில் வயிற்றுப் போக்கு பிரச்சனைகள் வந்துவிட்டால், குழந்தைகளின் உடம்பில், நீர்ச்சத்து குறைந்து, விரைவில் சோர்ந்து விடுவர். வெளியில் செல்லும் போது, வெயில் தாகம் தணிக்கும் பானம் குடிப்பதை தவிர்த்து எலுமிச்சை ஜூசை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது.

தண்ணீரை, மாற்றி மாற்றி குடிப்பதால் ஏற்படும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். வெயில் காலத்தில், குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து, அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். சாதாரண பவுடர்களுக்கு பதில், வேர்க்குருவைத் தடுக்கும் பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்

nathan

மாதவிலக்கின்போது ஏற்படும் வயி்ற்று வலி

nathan

உங்களுக்கு அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?

nathan

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் மாசிக்காய்.

nathan

தொிந்துகொள்ளுங்கள்! மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

nathan

உங்கள் குழந்தை எப்போது தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்?தெரிஞ்சிக்கங்க…

nathan

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan