ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கோங்க.! தானே பேசிக்கொள்பவரா நீங்கள்?

சுய பரிசோதனை, சுய விருப்பம், சுய தேவை, சுய மாரியாதை என நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், சுய பேச்சு(தனக்கு தானே பேசிக்கொள்வது) அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சுய பேச்சு என்று கூறினால் நீ என்ன பைத்தியா? தனக்கு தானே பேசிக்கிற என்று கூறுகிறவர்கள்தான் அதிகம். தனக்கு தானே பேசிக்கொள்வது என்பது மன நோய் அல்ல. தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல தனக்கு தானே சுயமாக பேசிக்கொள்வதும் அவசியம். இது மனரீதியான ஆரோக்கியத்தை தருகிறது.

மனதில் எதையும் வைத்துக்கொண்டு புலம்ப தேவையில்லை. தனக்கு தானே பேசிக்கொள்வதிலும் உள்ளுக்குள் பேசிக்கொள்வதும் வாய்விட்டு பேசுவதும் என இரண்டு வகையாக சொல்லலாம். பெரும்பாலும் வாய்விட்டு பேசுவதைதான் அதிகம் விரும்புகிறார்கள். உதாரணமாக இன்று அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததற்கு உங்களை நீங்களே திட்டிக்கொள்வீர்கள். “காலையில சீக்கிரமா எழாமா நல்ல தூங்கனத்துக்கு நல்லா திட்டுவாங்க போற” சாதாரணமா பேசியிருப்பீர்கள். இருப்பினும் தனக்கு தானே சத்தமாக பேசுவது மக்களிடமிருந்து சில வித்தியாசமான தோற்றமாக நாம் ஈர்க்கப்படக்கூடும். ஆனால், இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தனக்கு தானே பேசுவதால் என்ன நிகழும்?

உங்கள் எண்ணங்களின் மூலம் நீங்களே உங்களுக்குள் பேசும்போது, அது எதிர்மறை எண்ணங்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் சிறந்த முறையில் கவனம் செலுத்த உதவுகிறது. உங்களுடைய எண்ணங்களை நீங்கள் வெளிப்படுத்தத் தொடங்கும் போது, அதில், உங்களின் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்குங்கள்.

தனக்கு தானே பேசுவதால் உங்களுடைய மனதையும், நடத்தையையும் நீங்களே கட்டுப்படுத்தமுடியும். மேலும் உங்கள் எண்ணங்கள், நினைவுகள் மற்றும் திட்டங்களை திறமையாக திறம்பட செய்ய முடியும். இப்படி தனக்கு தானே பேசி கொள்ளவது பல்வேறு வகைகளில் நன்மையை உண்டாக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. தினமும் நீங்கள் உங்களிடம் பேசி கொள்ளவது நல்லது. உதாரணமாக, நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது, தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு விட்டோமா? என்று உங்களுக்கு நீங்களே பேசி கொள்ள வேண்டும். அப்படி பேசுவதால் உங்களுக்கு ஞாபக திறனும் அதிகரிக்கும்.
jmhkh
எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுங்கள்

தனக்குத்தானே பேசி கொள்வதை உங்கள் அன்றாட பணிகளில் ஒன்றாக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசுவது உங்களுடைய தனி அறையாக இருந்தாலும் சரி, கழிவறையாக இருந்தாலும் சரி வாய்விட்டு உங்களுக்குள் சத்தமாக பேசுங்கள். அவ்வாறு பேசுவதன் மூலம் உங்களின் அன்றாட பிரச்சினைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும் கூட மிகச் ஈஸியாக சரிசெய்துவிடலாம்.

தனக்கு தானே பேசுவது ஏன் முக்கியமானது?

தனக்கு தானே பேசிக்கொள்ளாத மக்கள் என்று இங்கு யாரும் இல்லை. அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தங்களுக்குள் பேசாமல் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. உங்களை நீங்களே திட்டுவதற்கும், பாரட்டுவதற்கும், அழும்போதும் உங்களுக்குள் நீங்கள் கண்டிப்பாக பேசியிருப்பீர்கள். தனக்கு தானே பேசுவதால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பல உள்ளன.

மன அழுத்தம் குறையும்
உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது
முன்னுரிமை அளிப்பதில் சிறந்தவர்
உங்களை நீங்களே ஊக்களித்துக்கொள்ளலாம்.

இலக்குகளை அடைவது

தனக்கு தானே பேசிக்கொள்வது என்பது உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது. உங்களுடன் பேசுவது உங்கள் நல்லறிவை இழப்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக உங்களுக்குள் நிறைய நேர்மறை எண்ணங்களை உருவாக்க உதவுகிறது.

தினமும் கண்ணாடியின் முன்பு நின்று உங்களுடன் சிறிது நேரம் நீங்கள் உரையாடுங்கள். தினமும் நேர்மறையான உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறுவது குறிப்பிட்ட குறிக்கோளை அடைய உங்களுக்கு உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் தனக்கு தானே நிறைய பேசிக்கொள்வார்கள். அது அவர்களுடைய இலக்கை அடைய உதவுகிறது.

முன்னுரிமை அளிப்பது

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய வேளைகள் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய வேலையின் அளவைக் குறைக்கும்போது, தனக்கு தானே பேசுவது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை சத்தமாக மீண்டும் கூறும்போது, பணிகளின் முக்கியத்துவத்தின் வரிசையில் தரவரிசைப்படுத்த அது உதவுகிறது. நீங்கள் சத்தமாக தங்களுக்குள் பேசும் போது, உங்கள் கவனமெல்லாம் அங்கு சென்று உங்கள் மூளை அதைச் செய்ய விரும்புகிறது. ஆதாலால், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் நீங்கள் சரியாக செயல்படுவீர்கள்.

ஊக்கமளிப்பது

நீங்கள் மிகவும் நெருக்கடியாக இருந்த சூழ்நிலையில் அதை அமைதியாகக் கையாண்டிருந்தால் அல்லது ஒரு திட்டத்தை சரியான நேரத்தில் முடித்திருந்தால், உங்களைப் பாராட்ட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் மனம் விட்டு பாராட்டுங்கள். தனக்கு தானே சத்தமாகப் பேசுவது உங்கள் எண்ணங்களைத் தெளிவாகச் செயலாக்குவதற்கும், அதற்கான வரவுகளை உங்களுக்குக் கொடுப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

மன அழுத்தம் குறையும்

தனக்குத் தானே பேசி கொள்வது, நன்மைகளையே உண்டாகும் என்று பல ஆராய்ச்சியாளர்களும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் சில முக்கிய முடிவைகள் அனைத்தும் தனக்குத்தானே பேசி முடிவு செய்த பின்னரே நீங்கள் எடுக்கிறீர்கள். இது உங்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தனக்கு தானே பேசிக்கொள்ளும் பழக்கம் உங்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

கடுமையான மன உளைச்சலில் இருக்கும் நேரங்களில், இந்த பழக்கம் உங்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். இது ஒரு தியானம் போன்றதாகும். நேர்மறையான எண்ணங்களுடன் தனக்கு தானே பேசி கொள்வது உங்களுக்கு நன்மையையே உண்டாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button