29.5 C
Chennai
Sunday, May 19, 2024
gjgj 1
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

அதிரசம்

தேவையான பொருட்கள்.:
அரிசி மாவு – 4 கப்,
துருவிய வெல்லம் – 4 கப், ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
வாழையிலை – இரண்டு சதுரங்கள் (அதிரசம் தட்ட).

gjgj 1

பொரிக்க.:
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு.

செய்முறை.:
மாவு தயாரிக்க என்றே தனி அரிசி கிடைக்கும்.

அந்த அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஒரு துணியில் பரப்பிக்காயவைக்கவும்.

வெயிலில் வைக்க வேண்டாம். முக்கால்வாசி காய்ந்தவுடன் மெஷினில் கொடுத்து அதிரசத்துக்கென்று சொல்லி அதை அரைத்துவைத்துக் கொள்ளவும். சலிக்க வேண்டாம்.

வெல்லத்தையும் தண்ணீரையும் கலந்து கரைத்துவைத்துக் கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து வடிகட்டி வெல்லக்கரைசலைக் கொதிக்கவிடவும்.

கெட்டிக் கம்பிப் பதமாக இருக்க வேண்டும்.

இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

அரைத்துவைத்து ரெடியாக உள்ள மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி தயாராக வைத்துள்ள வெல்லப்பாகை அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளறவும்.

நன்றாக தோசை மாவுப் பதத்துக்கு வந்தவுடன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழிந்த பிறகு ஒரு வாழை யிலையில் சிறுசிறு வட்டங்களாகத் தட்டி நெய்யிலோ, எண்ணெய்யிலோ பொரித்தெடுக்கவும்.

குறிப்பு.:
மாவு ஈரப்பதமாக இருக்க வேண்டும்.

அதிரசம் மாவு ரெடியானதுமே பொரிக்கக் கூடாது.

பாகை கீழே இறக்கி வைத்து, பெரிய தட்டில் கிளற வேண்டும். அடுப்பின் மேல் கிளறக் கூடாது.

Related posts

நேந்திரம்பழ நொறுக்கு

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

மைசூர் பாக்

nathan

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan

இனி வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி…!

nathan