திருப்பு முனையாக அமைந்த தருணம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அமலாவை சாதிக்கத் வைத்த டி ராஜேந்தர்..

1980களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அமலா. தற்போது நடிகையாக, அம்மாவாக தனது கடமையை செவ்வனே செய்து வரும் அமலாபாலின்

ஆரம்ப காலகட்டங்களில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்ததை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகை அமலாவின் அப்பா விமான கடற்படையை அதிகாரியாக இருந்ததால் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஆகையால் சென்னையில் ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க முடிவு எடுத்தார் அமலா. இதனிடையில் அவரது அப்பாவும் அம்மாவும் பிரிந்ததால் சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை ஏற்பட்டது.

மேலும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வயிற்றைக் கழுவி வந்துள்ளார். இந்நிலையில்தான் டி. ராஜேந்தர் அவரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் எனக்கு நடிக்க தெரியாது என தயங்கிய அமலாவை, எனக்கு அதுதான் வேண்டும் என அவரை ஊக்கப்படுத்தி நடிக்கச் சொல்லிக் கொடுத்து வாய்ப்பும் அளித்திருக்கிறார் டி. ராஜேந்தர்.

அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கலக்கி, நடிகர் நாகர்ஜூனாவுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு தற்போது சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அமலா எப்போதும் தன் வாழ்வில் டி. ராஜேந்தரின் உதவியை மறக்க மாட்டேன் என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

Leave a Reply