ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கும் இப்படி யோனி வறட்சி பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனையை எளிதில் ஒருசில உணவுகளைக் கொண்டு சரிசெய்ய முடியும்.

தம்பதியர்களிடையே அடிக்கடி சண்டைகள் எழும். பொதுவாக உடலுறவின் போது பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் யோனி வறட்சி.

துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், யோனி வறட்சியால் பல பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும். இதன் விளைவாக துணையை திருப்திப்படுத்த முடியாமல், மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.

உங்களுக்கும் இப்படி யோனி வறட்சி பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனையை எளிதில் ஒருசில உணவுகளைக் கொண்டு சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் யோனி வறட்சியைத் தடுக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை பெண்கள் அன்றாடம் உட்கொண்டு வந்தால், யோனியில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, உடலுறவில் சிறப்பாக ஈடுபட்டு, துணையை முழுமையாக திருப்திப்படுத்த முடியும். சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போமா!

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. இது சருமத்தில் மட்டுமின்றி யோனிப் பகுதியிலும் வறட்சியைத் தடுக்கும். அதுவும் சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், வயிற்றில் இருந்து யோனி வரை வறட்சி ஏதும் ஏற்படாமல், செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறவும், எல்லாவற்றையும் தடையின்றி நகர்த்தவும் உதவும்.

ஆளி விதைகள்

இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள் ஆளி விதைகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சிறப்பாக பராமரித்து, யோனி வறட்சி மட்டுமின்றி, அனைத்து வகையான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவும். ஆகவே தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சூரியகாந்தி விதைகள் மற்றும் எள் விதைகள்

விதைகளில் சூரியகாந்தி மற்றும் எள் விதைகள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் இவற்றில் யோனியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே இந்த விதைகள் பெண்கள் உட்கொண்டு வந்தால், யோனியில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

பசலைக் கீரை

விதைகளைப் போன்று பசலைக்கீரையும் யோனியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பசலைக்கீரையில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதைத் தான் யோனி வறட்சியை சந்திக்கும் பெண்களை அதிகம் சாப்பிட மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைப்பார்கள்.

இறால்

கடல் உணவுகளுள் ஒன்றான இறாலில் யோனி வறட்சியைத் தடுக்கும் வைட்டமின் ஈ சத்தும் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி இறாலை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கடல் சிப்பி

உங்களுக்கு இறால் சாப்பிட பிடிக்காவிட்டால், கடல் சிப்பியைக் கூட சாப்பிடலாம். இதில் ஜிங்க் சத்து ஏராளமாக உள்ளது. ஜிங்க் யோனி வறட்சியை எதிர்த்துப் போராட உதவும் முக்கிய சத்தாகும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் கடல் சிப்பியை உட்கொள்ளுங்கள்.

முழு தானியங்கள்

முழு தானியங்களான திணை மற்றும் கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த வகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவைப் பராமரித்து, ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் யோனியில் வறட்சி ஏற்படும்.

நட்ஸ்

நட்ஸ்களில் பிஸ்தா, வால்நட்ஸ், பாதாம் போன்றவற்றில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இதை பெண்கள் அன்றாடம் ஒரு கையளவு உட்கொண்டால், யோனி வறட்சியைத் தடுக்கலாம்.

டோஃபு

யோனி வறட்சியால் போராடும் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போதுமான அளவில் இல்லாமல் இருக்கும். சோயா பொருட்களான டோஃபு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிப்பதோடு, யோனி வறட்சியைத் தடுக்கும்.

வெண்டைக்காய்

யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறப்பான ஓர் காய்கறி தான் வெண்டைக்காய். பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, யோனி வறட்சி தடுக்கப்பட்டு யோனியின் ஆரோக்கியமும் மேம்படும்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளது. இவை சருமத்தில் மட்டுமின்றி உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, நீர்ச்சத்தையும், நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்

அடர் பச்சை இலைக் காய்கறிகள் இரத்த ஓட்டத்தை உடலில் மேம்படுத்தும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாது. மேலும் பச்சை இலைக் காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், இது ஹார்மோன் அளவை சமநிலையில் பராமரிக்கும்.

தண்ணீர்

தண்ணீர் குடித்தால் உடல் வறட்சி மட்டுமின்றி, உறவின் போது யோனியில் ஏற்படும் வறட்சியும் தடுக்கப்படும். ஒரு பெண்ணின் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் தான், யோனியில் வறட்சி ஏற்படும். எனவே தினமும் போதுமான அளவு நீரைக் குடியுங்கள்.

நீர்ச்சத்துள்ள பழங்கள்

தர்பூசணி, அன்னாசி மற்றும் கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் 90% நீர்ச்சத்து உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களை பெண்கள் அதிகம் உட்கொண்டால், உடல் வறட்சியுடன், யோனி வறட்சியும் தடுக்கப்படும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… கையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம்

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! ஆண்கள் இதுவரை வெளியே பகிராத விஷயங்கள்….

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: