அழகு குறிப்புகள்

எளிதாக நம் முகத்தில் உள்ள பருக்களை விரட்டி அடிக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு.

இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன.

இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும்.

எனவேபரு நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது இயற்கையான முறையில் எளிதாக நம் முகத்தில் உள்ள பருக்களை விரட்டி அடிக்கலாம் இதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவலாம்.

வாரத்திற்கு மூன்று முறையாவது ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.
குறிப்பாக முகத்திற்கு தனி துண்டு பயன்படுத்த வேண்டும் அல்லது டிஷ்ஷு பயன்படுத்தி முகத்தை துடைக்கவேண்டும். தலை துவட்டும் துண்டைக் கொண்டு முகத்தை துடைக்கக்கூடாது.

துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி , கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி அனைத்தையும் எடுத்து ஒன்றாக கலந்து அத்துடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளவும். பின்னர் தூங்குவதற்கு முன் முகத்தின் முழுவதும் பூசிக்கொண்டு பின்னர் அடுத்த மறுநாள் முகத்தை கழுவி விடவேண்டும் தொடர்ந்து செய்து வர முகப்பரு குறைவது உங்களுக்கு உணர முடியும்.

Related posts

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan

சுவையான கேரட் பாதாம் கீர் !…

sangika

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: