பால்கனியிலிருந்து விழுந்து குழந்தை மரணம் : செல்போனில் மூழ்கிய தாய் ;

தாய் செல்போன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒன்றரை வயது குழந்தை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சையத் அபுதாகீர். டீக்கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி மும்தாஜ்(30). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் இர்பார்னுக்கு ஒன்றரை வயது ஆகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சையத் டீக்கடைக்கு சென்றுவிட்டார். அப்போது பால்கனியில் நின்று கொண்டு மும்தாஜ் இர்பானுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டிற்குள் செல்போன் ஒலித்துள்ளது. எனவே, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு மும்தாஜ் செல்போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது குழந்தை இர்பான் பாலகனியிலிருந்து கீழே விழுந்தான். அதைக்கண்டு பதறிய மும்தாஜ் கீழே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இர்பானை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இர்பான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply