கவினை பற்றியும் நினைத்துப் பாருங்கள். அவரை காயப்படுத்தாதீர்கள். லாஸ்லியா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..

லாஸ்லியா தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை எச்சரித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

அவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் பகிரங்கமாக பிக்பாஸ் வீட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் கவினுடனான காதலை கைவிட மறுத்தார் லாஸ்லியா.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயை திறக்காமல் இருந்து வருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பாராமுகம் காட்டிவந்தனர்.

காதல் முறிவு
அப்பாவின் கண்டிஷன்

இதனால் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டது என்று தகவல் பரவியது. அதே நேரத்தில் லாஸ்லியாவின் அப்பா போட்ட கண்டிஷனால்தான் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

வாய் திறக்கவில்லை
போட்டோக்கள்

ஆனால் பரவும் எந்த தகவல் குறித்தும் இருவரும் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். அவ்வபோது லாஸ்லியா தன்னுடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

லாஸ்லியா மவுனம்
போட்டோ

நெட்டிசன்கள் கவின் குறித்து கேட்கும் கேள்விக்கு எல்லாம் லாஸ்லியா மவுனத்தையே பதிலாக அளித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் போட்டோ சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.

காயப்படுத்தாதீர்கள்
விட்டுவிடாதீர்கள்

அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார் லாஸ்லியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், கவினை பற்றியும் நினைத்துப் பாருங்கள். அவரை காயப்படுத்தாதீர்கள். எதற்காகவும் அவரை விட்டுசென்றுவிடாதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Reply