ஆரோக்கியம் குறிப்புகள்

வால் நட்ஸ்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் சருமத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் குணமாகும்.

வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.

வால்நட்ஸில் உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன் மற்றும் கார்போஹைட்டேட்டுகளை கொண்டுள்ளன. புரோட்டின் நிறைந்த இந்த எண்ணெய்யை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புத பலன்களை பெறமுடியும்.

வால் நட்ஸ்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து கவுவினால் சருமத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் முற்றிலுமாக மறைந்து இளமையான தோற்றத்தை பெறமுடியும்.

சருமத்தில் ஏதேனும் பகுதிகளில் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டால் அந்த பகுதிகளில் வால்நட்ஸ் எண்ணெய்யை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரிசெய்ய குளிக்கும் நீரில் வால்நட்ஸ் எண்ணெய்யை சிறிதளவு சேர்த்து குளிக்க பயன்படுத்தினாலே போதும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

வால்நட்ஸ் எண்ணெய்யில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது. இதனால் இதயநோய், புற்றுநோய், சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

nathan

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அனுபவிக்கிற வலி சாதாரணமானதுதானா?

nathan

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: