ஆரோக்கியம் குறிப்புகள்

ஹெல்த் ஸ்பெஷல் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய என்ன செய்யலாம்?..!!

பெண்களுக்கு அவ்வப்போது யோனி பகுதியில் அரிப்பு., நமநமப்பு., எரிச்சல் மற்றும் வலி போன்ற பிரச்சனையானது ஏற்படும்.

இப்போதுள்ள நிலையில் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு பணிகளை மேற்கொண்டு வருவதால்., யோனி பகுதி சருமத்தோடு உராய்வில் ஈடுபடுவதால் அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும்., யோனியில் அரிப்பு ஏற்பட பல காரணங்களும் உள்ளது. இறுக்கமான உள்ளாடைகளை அணிந்திருந்தல்., நம்ப்கின்களின் உபயோகம்., அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் உடலின் எடை., தாம்பத்தியத்தின் போது உராய்வு ஏற்படுதல்., சுய இன்பம் மற்றும் சுய இன்பம் காணும் போது ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளும் உள்ளது.

இதுமட்டுமல்லாது கெமிக்கல்கள் நிறைந்துள்ள வெஜினல் காஸ்மாட்டிக் பொருட்களை உபயோகம் செய்வதால்., இவ்வாறான பொருட்களில் இருக்கும் ஆல்கஹாலின் காரணமாக ஏற்படும் அரிப்பு., எரிச்சல் மற்றும் வறட்சி., பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கும் போது ஏற்படும் (லேசர் முறை மற்றும் வேக்சிங்) பிரச்சனைகள் போன்றவை உள்ளது.

இதனால் சருமம் சிவந்த நிறத்துடன் காணப்பட்டு., எந்த நேரமும் அரிப்பு மற்றும் பாதிக்கப்படும் யோனி பகுதியில் அரிப்பு., வலி., சரும எரிச்சல்., சரும பிளவு மற்றும் தோலின் நிறம் சிவப்பாதல்., தோல் உரிவது., தொடும் போது ஏற்படும் வலி மற்றும் அரிப்பு., எரிச்சல் போன்றவையும் ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாக்குகிறது.

இதனை தவிர்ப்பதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து பாதிக்கப்பட்ட யோனியின் வெளிப்புற சருமம் மற்றும் அந்தரங்க பகுதியில் தேய்த்து வந்தால் யோனி பகுதியில் ஏற்பட்ட அரிப்பு பிரச்சனையில் இருந்து நீக்கம் கிடைக்கும்.

ஒரு தே.கரண்டி பட்டர் மற்றும் அரை தே.கரண்டி மஞ்சள் பொடியை சேர்ந்து நன்றாக பேஸ்ட்டாக்கி., பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் நீரினால் சுத்தம் செய்யலாம். ஒரு கையளவு வேப்பிலையை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக மாற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து., சுமார் அரை மணிநேரம் கழித்த பின்னர் சுத்தம் செய்யலாம்.

கற்றாழையின் ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து பின்னர் உலர்ந்தவுடன் கழுவி வந்தால் அரிப்பு பிரச்சனையில் இருந்து விலக்கம் அடையாளம். மேலும்., இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிட்டு., இயன்றளவு காற்றோட்டமான ஆடைகளை அணிவது நல்லது. மேலும்., குளித்து முடித்த பின்னர் பிறப்புறுப்பு பகுதியை நன்றாக உணர்த்துவது., ஈரமான துணிகளை அணியாமல் இருத்தல் போன்றவற்றில் கவனம் தேவை.. பிறப்புறுப்பில் முடிகளை நீக்கும் போது கவனமாக நீக்கம் செய்ய வேண்டும்.

Related posts

2 நிமிடம் காலில் இந்த இடத்தில் அழுத்துங்கள்: பல பிரச்சனைகள் குணமாகும்

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: