ஆரோக்கியம் குறிப்புகள்

தன் தாயின் நினைவலைகளை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார் ஜான்வி.

2018-ம் ஆண்டு, `தடக்’ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமான ஜான்வி, அவ்வப்போது ஏராளமான அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறிப்புகளை சமூக வலைதளத்தில் பகிர்வதுண்டு.

அவற்றில் பல டிப்ஸ், தன் தாய் ஸ்ரீதேவியிடமிருந்து கற்றுக்கொண்டவை என்பதைப் பதிவு செய்தும் இருக்கிறார் ஜான்வி.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற `பெனிட்டான்’ வாசனைத் திரவியம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜான்வி, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கியமான தருணங்களை நினைவுபடுத்தும் நறுமணங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது, “என் குழந்தைப் பருவத்தை நினைத்தாலே, என் அம்மாவின் வாசம்தான் நினைவுக்கு வருகிறது. சிறுவயதில், சென்னையிலுள்ள வீட்டில்தான் அதிக நாள்கள் இருந்தோம்.

அப்போது அம்மா, வீட்டைச் சுற்றி மல்லிகைப்பூ செடி வைத்திருந்தார். அவரின் தலையிலும் எப்போதும் மல்லிகைப்பூ சரம் இருக்கும். அதனால் அதுதான் அவருடைய வாசம் என என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது” என்று கூறி தன் தாய்க்கு மிகவும் பிடித்த வாசனை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒருமுறை பள்ளி விழா ஒன்றில் பரதநாட்டியம் ஆடுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒப்பனை செய்தது அம்மாதான். அதற்காகப் பல்வேறு விதமான லிப்ஸ்டிக் சோதனைகளில் ஈடுபட்டோம்” என்று ஸ்ரீதேவியுடனான தன்னுடைய முதல் மேக்-அப் அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டார் ஜான்வி.

“நீங்கள் வொர்க்-அவுட் செய்த பிறகு, திறந்த சருமத் துளைகளை மூடுவதற்கு முகத்தை ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவுங்கள். என் அம்மா எனக்குச் சொன்ன இந்த டிப்ஸ், நிச்சயம் உங்களுக்கும் வொர்க்-அவுட் ஆகும். எங்களுக்கான ஹேர் ஆயிலை உலர்ந்த பூக்கள் மற்றும் நெல்லிக்காயைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பார் அம்மா. வாரத்துக்கு மூன்று நாள்கள் எனக்கும் என் தங்கை குஷிக்கும் நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவார். எஞ்சியிருக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை முகத்துக்கு மாஸ்க்காக அப்ளை செய்வோம்” என்று தன் தாயின் நினைவலைகளை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார் ஜான்வி.

Related posts

குங்குமப்பூவில் அழகின் ரகசியம்

nathan

உங்களுக்குதான்… பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம்!

nathan

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: