உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உடல் இன்பத்திற்கு அல்ல. செக்ஸ்டிங் செய்பவரா நீங்கள்?

காதலிக்கும் போது முத்தம் கொடுப்பதே தவறு என்று இருந்த காலகட்டத்தில் இருந்து இன்று தினமும் ஆபாச செய்திகள், நிர்வாணப் படங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு காதலர்கள் மாறிவிட்டனர்.

காதலன்/காதலியுடன் ஆபாசமாக பேசுவதும், பகிர்ந்து கொள்வதும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இது உங்களின் காதல் வாழ்க்கைக்கு கூடுதல் சுவாரசியம் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இதனால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடும். இந்த பதிவில் செக்ஸ்டிங் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தலாம்

ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது அல்லது அவர்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. உங்களின் துணை எப்போது வேண்டுமென்றாலும் உங்களுக்கு எதிரானவராக மாற வாய்ப்புள்ளது. உங்களின் துணை உங்களிடம் நல்லவர் போல நடிப்பவராக கூட இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உங்களின் நிர்வாணப்படங்கள் அல்லது ஆபாசப்படங்கள் உங்களுக்கே எதிரான சாட்சியாக மாறலாம். அவற்றை உங்களுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த பிரச்சினையால் வாழ்க்கையை தொலைத்த பல இளம் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே உங்களின் பாதுகாப்பு உங்களுடைய சுயகட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

உங்கள் உறவை இழக்கக்கூடும்

எந்தவொரு செய்தியும் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டுத்தீ போல பரவக்கூடிய அபாயகரமான தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் காதலன்/காதலியிடம் நீங்கள் பகிர்ந்து கொண்ட நிர்வாணப் படங்களோ அல்லது ஆபாச குறுஞ்செய்தியோ அவர்களுக்கே தெரியாமல் கூட இணையத்தில் பரவும் அபாயம் உள்ளது. ஒருவேளை அப்படி உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் பரவ நேரிட்டால் உங்கள் துணைக்கு உங்களின் மீதிருந்த நம்பிக்கையை இழக்க நேரிடும். இதனால் உங்கள் காதல் வாழ்க்கையை முற்றிலுமாக நீங்கள் இழக்க வாய்ப்புள்ளது. மேலும் இது சமூகத்திலும் உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

கொடுமைப்படுத்துதலுக்கு வழிவகுக்கும்

உங்கள் நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் செல்லும் தருணம், நீங்கள் கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்ளக்கூடும், குறிப்பாக இணைய-கொடுமைப்படுத்துதல், அங்கு மக்கள் இணையம் மூலம் உங்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களுக்கு மோசமான செய்திகளை அனுப்பலாம் மற்றும் சில பாலியல் கோரிக்கைகளை வைக்கலாம். இது மட்டுமல்லாமல், உங்கள் சகாக்கள், நண்பர்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களும் உங்களை புறநிலைப்படுத்தலாம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யலாம். மோசமான ஒழுக்கங்களைக் கொண்ட ஒரு நபராக அவர்கள் உங்களை உணரக்கூடும்.

குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்

உங்கள் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் அல்லது தனிப்பட்ட ஆபாச உரையாடல்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்ட பிறகு, கொடுமைப்படுத்துதல் இல்லாமல் இருக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள், ஒரு நபர் ஏற்கனவே காயமடைந்துள்ளார், உலகம் முழுவதும் அவரை அல்லது அவளை கேலி செய்கிறது. இது குற்றம் என்பதையும் தாண்டி அவர்களுக்கு பெரும் சங்கடத்திற்கு வழிவகுக்கும்.இதனால் அவர்கள் சுயமரியாதையையும், நம்பிக்கையையும் இழக்க நேரிடும். விளைவுகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் குற்ற உணர்ச்சியால் தவறான முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் எதிர்கால உறவுகளிலும் நம்பிக்கையை இழக்கலாம்.

சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்

உங்களின் தனிப்பட்ட வீடியோக்கள் அல்லது உரையாடல்கள் வெளிப்படுவது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் இருவரில் யார் மூலமாக அவை வெளிவந்ததோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துறை எடுக்கலாம். மேலும் அதனை பெற்றுக்கொண்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதனை பரப்பினாலும், பரப்பாவிட்டாலும் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.

எதிர்கால உறவுகளை சிதைக்கும்

செக்ஸ்டிங் செய்வது உங்களின் எதிர்கால உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.சில நாட்களில் விஷயங்கள் சாதாரணமாகிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் இதன் பாதிப்புகள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கும், இதன் விளைவுகளை நீங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடும். எதிர்காலத்தில் நீங்கள் வேறு உறவில் தொடர நினைத்தாலும் உங்களின் பழைய சம்பவங்கள் அந்த உறவில் நிம்மதியாக இருக்க விடாது, மேலும் எப்போதும் பயத்துடனேயே இருக்க நேரிடும். ஒருமுறை இந்த தவறில் சிக்கிக்கொண்டால் அதன்பின் உங்கள் வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.

Leave a Reply