காதல் கதை விஜே மணிமேகலை வீட்டை எதிர்த்து காதல் திருமணம்…

சன் மியூசில் விஜே மணிமேகலை. ஒரு காலத்தில் மணிமேகலை என்றால் சமூகவலைத்தளங்களில் அத்தனை ரசிகர்கள் கூட்டம்.

மணிமேகலைக்கு ஃபேஸ்புக்கில் பல ரசிகர் பக்கங்கள் இருந்தனர். பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட இவரிடம் பேசுவதற்காக போன் செய்யும் ரசிகர்களே அதிகம்.

கல்லூரியில் சேர்ந்ததுமே மீடியா வேலைக்கு வந்தவர் மணிமேகலை. முதல் வேலையே தொகுப்பாளினியாகக் கிடைத்ததால் படித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார். அப்போது தான் மணிமேகலைக்கு நடன இயக்குனர் ஹூசனுக்கு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்யாணத்தில் முடிந்தது.

ஹூசனை திருமணம் செய்ய மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக வீட்டை விட்டு வெளியேற் மணிமேகலைக்கு அவர்களின் நண்பர்கள் திருமணம் செய்து வைத்தனர்.தனது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்ட இந்த ஜோடி இப்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ தொடங்கி அனைத்திலும் இவர்களின் ஒற்றுமை, செல்ல சண்டைகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. வீட்டில் செல்ல பெண்ணாக வளர்ந்த மணிமேகலை இப்போது குடும்ப பொறுப்பை வழி நடத்துகிறார். இதை அவரே வியந்து ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.

Leave a Reply