கணவர் மீது நடிகை புகார் போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்..

குடிபோதையில் தன் மகள் மீது சிறுநீர் கழித்து தவறாக நடந்து கொண்டதாக நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவியான நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி ஜெயஸ்ரீயும். சீரியல் நடிகர்களான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயஸ்ரீக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயஸ்ரீ. போலீசாரின் விசாரணையில் அவரது கணவர் தான் ஜெயஸ்ரீயை அப்படி அடித்தது தெரிய வந்தது.
ஈஸ்வர் கைது


இது தொடர்பாக ஜெயஸ்ரீ சார்பில் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. ஈஸ்வரும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவரது தாயாருக்கு மட்டும் ஜாமீன் அளிக்கப்பட்டது. சின்னத்திரை வட்டாரத்தில் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவறான உறவு

இந்த சூழ்நிலையில் கணவர் ஈஸ்வர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜெயஸ்ரீ. அப்பேட்டியில் அவர், ‘தனது கணவருக்கும் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் தவறான உறவு இருப்பதாக’ வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மகளிடம் அத்துமீறல்

அதோடு, குடிபோதையில் வரும் ஈஸ்வர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், சமீபத்தில் ஒருநாள் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அருவருப்பின் உச்சமாக ஒருநாள் தன் மகள் மீது அவர் சிறுநீர் கழித்ததாகவும் அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் அதிர்ச்சி

வளர்ப்புத் தந்தையான ஈஸ்வரின் இந்த நடவடிக்கையால் அவரது மகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். முடிந்தளவிற்கு பிரச்சினையை தீர்த்து சமாதானமாகப் போகவே தான் விரும்பியதாகவும், ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என அவர் கோபமாக அந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்.
கோரிக்கை

ஈஸ்வர் திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபட்டதாகவும் ஜெயஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து அபகரித்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மீட்டுத் தரவும் ஜெயஸ்ரீ கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply