அசைவ வகைகள் அறுசுவை

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை

இதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும்.

Ingredients for சிக்கன் பிரியாணி

3/4 கிலோ பாசுமதி அரிசி
1 கிலோ சிக்கன்
5 பெரிய வெங்காயம்
4 தக்காளி
5 பச்சை மிளகாய்
1 கப் தயிர்
2 கையளவு புதினா
2 கையளவு கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
3 பிரியாணி இலை
3 ஸ்டார் பூ
3 பட்டை
3 கிராம்பு
3 ஏலக்காய்
1 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
4 to 5 முந்திரி
1/2 லெமன்

How to make சிக்கன் பிரியாணி

முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்பு முந்திரியை எடுத்து அதையும் பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மூன்று மேஜைக்கரண்டி நெய் மற்றும் நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
நெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு ஏலக்காய், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும். பட்டை, இலை சிறிது சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசனை போகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
அதற்குள் சிக்கனை நன்றாக கழுவி அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
சிக்கன் சிறிது வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.
இரண்டு நிமிடங்கள் வரை சிக்கனை பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வேக வைக்கவும்.
அதற்குள் ஊற வைத்திருக்கும் முந்திரியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் அரைத்த முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.
பிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் வேக விடவும்.
பத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து அதில் ஊற வைத்துள்ள அரிசியை எடுத்து போடவும்.
அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து பாதி மூடி லெமன் ஐ பிழியவும்.
பின்பு அதை பக்குவமாக கிளறி 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். (கிளறும் போது மெதுவாக கிளறவும் வேகமாக கிளறினால் அரிசி உடைந்துவிடும்.)
பத்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அதில் ஒரு மேஜைக் கரண்டி நெய்யை ஊற்றி பொறுமையாக கிளறவும். (அதில் தண்ணீர் இருந்தால் அடுப்பை நன்கு குறைத்து வைத்து தண்ணீர் வற்றும் வரை வைக்கவும்.
இப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான சுவையான பிரியாணி உண்ண தயார்.
இதை தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.

Related posts

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: